பக்கம் எண் :

 மிகைப் பாடல்கள்683

1082.

'மையல் இன்றியே இலங்கை மா நகர் காத்து, மாதே!

செய்யளாகிய திரு எனப் பொலிந்து, இனிது இருத்தி'

கைகளால் மிகப் புல்கியே, கண்கள் நீர் ததும்ப,

பொய் இலா மனத் திரிசடை, 'விடை' எனப்

போனாள்.

(146-1)
 
1083.

என்ற காலையில், எழுந்தவன் இயற்கையை நோக்கி,

நன்று நாயகன் அறிவொடு நினைவன நயந்தான்;

சென்று சேனையை நாடினன், திரிந்து வந்து எய்தி,

வென்றி வீரரில் வசந்தனைக் கண்டிலர், வெறுத்தார்.

(157-3)
 

(சில பிரதிகளில், 'சொன்ன வாசகம் பிற்பட' (157) என்ற
பாடலுக்குப் பின், 'வசந்தன் உயிர் வரு படலம்' தொடங்குகிறது.
157-3 என்னும் இந்தப் பாடலுக்கு முன் இதன் முன்னர்த் தந்துள்ள
142-19, 21 என்ற இரு பாடல்களும் காணப்பெறுகின்றன. இதன்பின்
142-22 என்ற பாடல் உள்ளது.)

 
1084.

என்னும் காலை(யில்), இராமனும், யமபடர் யாரும்

மன்னும் தொல் புரம் நோக்கியே, 'மணி நகை

முறுவல்

உன்னின் அன்றி, யான் தேவருக்கு உதவி செய்து'

என்னா,

பொன்னின் வார் சிலை எடுத்தனன், பொறுத்தனன்,

பொரவே.

(157-5)
 
1085.

எண் திசாமுகம் இரிந்து உக, யமபுரம் குலைய,

அண்டகோளகை அடுக்கு அழிந்து உலைவுற,

அழியாப்

புண்டரீகத்துப் புராதனன் முதலிய புலவோர்

தொண்டை வாய் உலர்ந்து அலமர, தொடு வில்

நாண் எறிந்தான்.

(157-6)
 
1086.

பாக வான் பிறையாம் என, பலர் நின்று துதிப்ப,

வாகை கொண்ட வெஞ் சிலையினை வளைவுற

வாங்கி