| மேக சாலங்கள் குலைவுற, வெயிற் கதிர் மாட்சி | |
| சோகம் எய்தி மெய் துளங்கிட, சுடு சரம் துரந்தான். | |
| | (157-7) |
| | |
| 1087. | வல்லை மாதிரம் மறைந்திட, வானவர் மயங்க, | |
| எல்லை காண்குறா யாவரும் இரியலில் ஏக, | |
| வில்லை வாங்கிய கரம் அவை விதிர்விதிர்ப்பு எய்த | |
| தொல்லை நான்மறை துளங்கிட, சுடு சரம் துரந்தான். | |
| | (157-8) |
| | |
| 1088. | வன் புலம் கிளர் நிருதரை வருக்கமோடு அறுக்க, | |
| மின் புலம் கொளும் உரும் என்ன, வீக்கிய வில்லைத் | |
| தன் பொலங் கையில் தாங்கியே தொடுத்த அச் | |
| சரங்கன் | |
| தென் புலன்தனை நிறைத்தது; செறிந்தன, சேணில். | |
| | (157-9) |
| | |
| 1089. | தருமராசனும், காலனும், யமபடர்தாமும், | |
| உருமு வீழ்ந்தென, சரம் வந்து வீழ்ந்ததை உணர்ந்து, | |
| மரும தாரையில் பட்டது ஓர் வடிக் காண வாங்கி | |
| நிருமியா, 'இது இராகவன் சரம்' என நினைந்தார். | |
| | (157-10) |
| | |
| 1090. | 'கெட்டது இன்று இனித் தென்புலம்; கேடு வந்து | |
| எய்தி; | |
| பட்டனம்; இனிப் பிழைப்பு இலம்' என்பது ஓர் | |
| பயத்தால், | |
| முட்ட எய்திய முயற்சியோடு யாவரும் மொய்ப்ப, | |
| சிட்டர்தம் தனித் தேவனை வணங்கினர், சென்றார். | |
| | (157-11) |
| | |
| 1091. | 'சிறந்த நின் கருணை அல்லால், செய் தவம் பிறிது | |
| இலார்மேல் | |
| புறம் தரு முனிவு சாலப் போதுமோ? புத்தேள்! | |
| நின்னை | |