| மறந்திருந்து உய்வது உண்டோ? மலர்மிசை | (157-12) |
அயனைத் தந்த, |
அறம் தரு சிந்தை ஐய! அபயம், நின் அபயம்' |
என்றார். |
| | |
| 1092. | 'அய்யனே! எமை ஆளுடை அண்டர் நாயகனே! | (157-13) |
மெய்யனே! என, சரணில் வந்து, யாவரும் வீழ்ந்தார்; |
'பொய்யினோர் செய்த பிழை பொறுத்தருள்!' என, |
போர் மூண்டு |
எய்ய நேரிலாச் சிலையினை மடக்கினன், இராமன். |
|
| | |
| 1093. | வந்து அடைந்து, 'உனக்கு அபயம்' என்று, அடியினில் | (157-14) |
வணங்கி, |
''எம் தனிப் பிழை பொறுத்தி'' என்று, இயம்பினீர்; |
இதனால் |
உன்தன்மேல் சலம் தவிர்ந்தனம்; யூக நாயகன்தான் |
தந்த சேனையின் வசந்தன் வந்திலன்; தருக' |
என்றான். |
| | |
| 1094. | தன் தனிச் சரண் வணங்கலும், இராகவன் சாற்றும்; | (157-15) |
''என் தனிப் பிழை பொறுத்தி'' என்று இயம்பினை; |
அதனால் |
உன்தன்மேல் சலம் தவிர்ந்தனம்; யூபநாயகன்தான் |
தந்த சேனையின் வசந்தன் வந்திலன்; தருக' |
என்றான். |
| | |
| 1095. | அண்ணல் ஆரியன், 'தருதி' என்று அருளலும், அவர் | (157-16) |
போய், |
விண் எலாம் புகுந்து ஓடியே, வசந்தனை விரைவில் |
கண்ணின் நாடி, நல் உயிரினைக் காண்கிலாது |
இருந்தார்; |
'திண்ணன் யாக்கை எங்கே?' என, சாம்புவன் |
செப்பும். |
| | |
(இதன்பின் 142-23, 142-8, 142-9 என்னும் பாடல்கள் உள்ளன.) |