பக்கம் எண் :

686யுத்த காண்டம் 

1096.

அன்னதே என, 'அவன் உயிர்க்கு அமரர்தம்

(157-17)

பதிக்கே

முன்னர் ஓர் உடல் கொண்டு, இவண் தருக!' என

மொழிய,

சொன்ன வாய்மை கேட்டு, அனுமனும் துணைவரைப்

பாரா,

'பொன்னின் பாதுகம் பணிந்தனென், விடை'எனப்

போனான்.

 

(இதன்பின் 142-10, 11, 25, 12, 15, 16 என்னும் பாடல்கள் வர,
'வசந்தன் உயிர் வரு படலம்' முடிவு பெறுகிறது.)

 
1097.

அன்னது ஆதலின் அமரர் அந் நகரிடை ஆங்கண்

(157-29)

முன்னது ஓர் உடல் நாடியே கொணர்ந்திட, முந்தச்

சொன்ன வாயுவைத் தரிசிக்க, வசந்தனும் தோன்றி,

பொன்னின் பாதுகம் புனைந்தனன்; தருமனும்

போனான்.

 
1098.

அன்னகாலையில், புட்பக விமானம் ஆங்கு அடைய,

(157-30)

முன் இராகவன், சானகி இலக்குவன் முதலா,

மன்னு வானரம் எழுபது வெள்ளமும் வரையா

உன்னி ஏறலும், உச்சியில் சொருகு பூப் போன்ற.

 
1099.

என்ற புட்பக விமானத்தின் ஏறினர் எவரும்;

(158-2)

'நன்றுதான்' என நாயகன் ஏறினன் திருவோடு;

அன்றுதான் இளங்கோவொடும் அக் கவி வெள்ளம்

ஒன்றுதான் என ஒரு திசை இருந்ததும் ஒக்கும்.

 
1100.

ஆய கண்டு, அமலன் உள்ளம் மகிழ்ந்தனன்;

(158-2)

அனுமன்தன்பால்

நேயம் மூண்டு அதுதான் நிற்க, நெடியவன் சரணம்

சூடி

மேயினன், தமர்களோடு வசந்தனும்; விண்மீதாகப்

போயினது, இராமன் சொல்லின், புட்பக விமானம்

அம்மா!