பக்கம் எண் :

 மிகைப் பாடல்கள்687

1101.

வென்றி சேர் கவியின் வெள்ளக் கடல் முகந்து

(162-1)

எழுந்து விண்மேல்

சென்றது விமானம்; செல்ல திசையோடு தேசம் ஆதி

என்றவை அனைத்தும் தோன்ற, இராமனும் இனிது

தேறி

தென் திசை இலங்கையின் சீர் சீதைக்குத்

தெரிக்கலுற்றான்.

 
1102.

'மன்னு பொற் கொடிகள் ஆட, மாட மாளிகையின்

(162-2)

ஆங்குத்

துன்னு பைம் பொழில்கள் சுற்ற, தோரணம் துவன்றி,

''வானோர்

பொன்னகர் ஒக்கும்'' என்று புகழ்தலின், புலவராலும்,

பன்ன அரும் இலங்கை மூதூர், பவளவாய் மயிலே!

பாராய்.

 
1103.

'வெதிர் எதிர் அஞ்சும் மென் தோள் வெண் நகைக்

(162-3)

கனி வாய் வல்லி!

எதிர் பொர வந்த விண்ணோர் - இறைவனைச்

சிறையில் வைத்த

அதிர் கழல் அரக்கர் தானை அஞ்சல் இல் ஆறு

செல்ல

கதிர் மதி விலங்கி ஏகும் கடி மதில் மூன்றும்

காணாய்.

 
1104.

'வென்றி வேல் கருங் கண் மானே! என்னொடும்,

(162-4)

இகலி, வெய்ய

வன் திறல் அரக்கன் ஏற்ற வட திசை வாயில்

நோக்காய்;

கன்றிய அரக்கன் சேனைக் காவலன் தன்னை நீலன்

கொன்று, உயிர் கூற்றுக்கு ஈந்த குண திசை வாயில்

நோக்காய்.

 
1105.

'மறத் திறல் வாலி மைந்தன், வச்சிரத்து எயிற்றோன்

தன்னைச்

செறுத்து, உயிர் செகுத்து, நின்ற தென் திசை

வாயில் நோக்காய்;