பக்கம் எண் :

688யுத்த காண்டம் 

அறத்தினுக்கு அலக்கண் செய்யும் அகம்பன்தன்

(162-5)

உடலை ஆவி

வெறுத்து, எதிர் அனுமன் நின்ற மேல் திசை வாயில்

நோக்காய்.

 
1106.

கருங் கடல் நிகர்ப்ப ஆன அகழி ஓர் மூன்றும்

(162-6)

காணாய்;

மருங்கு அடர் களபக் கொங்கை மதி நுதல் மிதிலை

வல்லி!

இருங் கட முகத்த யானை, இவுளி, தேர், காலாள்

துஞ்சி

பொரும் சுடர் நிறத்தர் வீய்ந்த போர்க்களம் தன்னைப்

பாராய்.

 
1107.

'கொடி மதில் இலங்கை வேந்தன் கோபுரத்து உம்பர்த்

(162-7)

தோன்ற,

அடு திறல் பரிதி மைந்தன் அவன் நிலை குலையத்

தாக்கி,

சுடர் முடி பறித்த அந் நாள், அன்னவன் தொல்லை

வெம் போர்ப்

படியினை நோக்கி நின்ற சுவேல மால் வரையைப்

பாராய்.

 
1108.

'பூக் கமழ் குழலினாய்! நின் பொருட்டு யான் புகலா

(162-8)

நின்றேன்;

மேக்கு உயர் தச்சன் மைந்தன் நளன் இவன்

விலங்கலால் அன்று

ஆக்கிய இதனை, வெய்ய பாதகம் அனைத்தும், வந்து

நோக்கிய பொழுதே, நூறும் சேதுவை, நீயும்

நோக்காய்.

 
1109.

ஆவினை, குரவரோடும் அரு மறை முனிவர்தம்மை

பாவையர் குழுவை, இன் சொல் பாலரை, பயந்து

தம் இல்