பக்கம் எண் :

 மிகைப் பாடல்கள்689

மேவின அவரை, செற்றோர், விரி கடல் சேது வந்து

(169-1)

தோய்வரேல், அவர்கள் கண்டாய், சுரர் தொழும்

சுரர்கள் ஆவார்.

 
1110.

மரக்கலம் இயங்கவேண்டி, வரி சிலைக் குதையால்

(169-2)

கீறித்

தருக்கிய இடத்து, பஞ்ச பாதகரேனும் சாரின்,

பெருக்கிய ஏழு மூன்று பிறவியும் பிணிகள் நீங்கி,

நெருக்கிய அமரர்க்கு எல்லாம் நீள் நிதி ஆவர்

அன்றே.

 
1111.

ஆங்கு அது காட்டக் கண்ட ஆயிழை, 'கமலம்

(170-1)

அன்ன

பூங் கழற் புயல்போல் மேனிப் புனித! என்

பொருட்டால் செய்த

ஈங்கிதற்கு ஏற்றம் நீயே இயம்பு' என, இரதம் ஆங்கே

பாங்குற நிறுவி நின்று, இங்கு இவை இவை

பகரலுற்றான்.

 

1112

'அந்தணர்தம்மைக் கொன்றோர், அருந் தவர்க்கு

(170-2)

இடுக்கண் செய்தோர்

செந் தழல் வேள்வி செற்றோர், தீ மனை இடுவோர்

தம்பால்,

வந்து இரந்தவர்க்கு ஒன்று ஈயா வைக்கும் வன்

நெஞ்சர், பெற்ற

தந்தையைத் தாயைப் பேணாத் தறுகணர், பசுவைச்

செற்றோர்.

 
1113.

'குருக்களை இகழ்வோர் கொண்ட குலமகள் ஒழியத்

(170-3)

தங்கள்

செருக்கினால் கணிகைமாரைச் சேர்பவர், உயிர்

கொல் தீம்பர்,

இருக்குடன் அமரும் தெய்வம் இகழ்பவர், ஊன்கள்

தின்று

பெருக்கிய உடலர், பொய்ம்மை பிதற்றுவோர், பீடை

செய்வோர்.