பக்கம் எண் :

 மூலபல வதைப் படலம்69

அரக்கர்   கண்களுக்கு  இராமனே தென்பட்டான். அரக்கர்களே 
கூட இராமனாகத்  தென்பட்டமையால்  அரக்கர்கள் தம்மவரையே
தாக்கி அழிதலும்  நிகழ்ந்தது''   பல  கோடி  அரக்கர்  மாண்ட
பின்னும்   இராமன்   சளையாதிருத்தல்   கண்ட அரக்கர்கள்
நாராயணாஸ்திரம் முதலான தெய்வப்  படைக்கலங்களை ஏவினர்.
இராமனும் அவ்வப்படைகள் கொண்டே அரக்கர் ஏவிய தெய்வப்
படைக்கலங்களின் ஆற்றலழியச் செய்தார்.
 

மூலபலப் படையை முழுமையாக அழித்தொழித்துவிட்டு, 
இணைப்பு நீக்கி, இலக்குவன் முதலியோர் இராவணனோடு 
போரிடுகின்ற களத்தை நோக்கி இராமபிரான் சென்றான். இது 
இப்படலச் செய்திகளின் சுருக்கம்.
 

இப்போரில்   இறந்தவர்  தொகை  கணக்கில் அடங்காது
என்பதைக் கலிக்கூற்றாகக் (9513) கூறியுள்ள பாடல் கற்பனை
வளம் மிக்கது. இலக்குவன், சுக்கிரீவன்,  அங்கதன், அனுமன்
போன்ற மாவீரர்களை எதிர்த்து  முன் எப்போதும் தோற்றிலா
விறலோன் ஆகிய இராவணன் போர் செய்துகொண்டிருக்கிறான்.
மூலபலப்   படையின்  பெருக்கமும்  திறமும் நோக்க வானர
சேனையின் அளவும்  ஆற்றலும்  சுருங்கியவையே. ஆயினும், 
அந்தப் போர் முடிந்துவிடாமல் நடந்துகொண்டிருக்கும் போதே 
அளவு காணமுடியாத பெரும்படையைத் தான் ஒருவனே தனி 
நின்று அழித்துவிட்டான். இராமபிரான் என்பது கூட்டு ஒருவரையும்
வேண்டாக் கொற்றவனாகிய இராமன், செயராமனே என்பதை
நிலைநாட்டும். இப்படலத்தின் சிறப்பான குறிப்பு இது.
 

படைத்தலைவர்களுக்கு இராவணன் கட்டளை
 

9299.

'வானரப் பெருஞ் சேனையை யான் ஒரு வழி  

சென்று,

ஊன் அறக் குறைத்து, உயிர் உண்பென்; நீயிர் 

போய், ஒருங்கே

ஆன மற்றவர் இருவரைக் கோறிர் என்று 

அறைந்தான் -

தானவப் பெருங் கரிகளை வாள் கொண்டு  

தடிந்தான்.

 

தானவப் பெருங் கரிகளை - அசுரராகிய பெரிய யானைகளை;
வாள்    கொண்டு    தடிந்தான்  -  வாளினைக்   கொண்டு
துணித்தவனாகிய  இராவணன்  (சேனைத்  தலைவர்களை  நோக்கி);
யான்  ஒருவழி சென்று -  நான் ஒரு புறமாகப் போய்; வானரப்
பெருஞ்சேனையை 
- வானரப்  பெரும்படைகளை;  ஊன் அறக்