பக்கம் எண் :

690யுத்த காண்டம் 

1114.

'வெய்யவன் உச்சி சேர மிக வழி நடந்து போவோர்,

(170-4)

மை அறும் முன்னோன்தன்னை வலி செயும்

தம்பிமார்கள்

கை உள முதல்கள்தம்மைக் கரந்து தம்பிக்கு ஒன்று

ஈயார்,

துய் அன சொற்கள் சொல்வோர், சோம்பரைச்

சுளித்துக் கொல்வோர்.

 
1115.

'ஊரது முனிய வாழ்வோர், உண்ணும்போது உண்ண

(170-5)

வந்தோர்க்கு

ஆர்வமோடு அளியாது இல்லம் அடைப்பவர், அமணே

சென்று

நீரினுள் இழிவோர், பாவ நெறிகளில் முயல்வோர்,

சான்றோர்,

தாரமது அணைவோர், மூத்தோர்தமை இகழ்

அறிவிலாதோர்.

 
1116.

'கண்டிலாது ''ஒன்று கண்டோம்'' என்று கைக்கூலி

(170-6)

கொள்வோர்,

மண்டலாதிபர் முன் சென்று வாழ் குடிக்கு அழிவு

செய்வோர்,

மிண்டுகள் சபையில் சொல்வோர், மென்மையால்

ஒருவன் சோற்றை

உண்டிருந்து, அவர்கள்தம்பால் இகழ்ச்சியை

உரைக்கும் தீயோர்.

 

1117.

'பின்னை வா, தருவென்' என்று பேசித் தட்டுவிக்கும்

(170-7)

பேதை

கன்னியைக் கலக்கும் புல்லோர், காதலால் கள்ளும்

மாந்தர்,

துன்னிய கலை வல்லோரைக் களிந்து உரைத்து

இகழ்வோர், சுற்றம்

இன்னலுற்றிடத் தாம் வாழ்வோர், எளியரை இன்னல்

செய்வோர்.