பக்கம் எண் :

 மிகைப் பாடல்கள்691

1118.

'ஆண்டவன் படவும் தங்கள் ஆர் உயிர் கொண்டு

(170-8)

மீண்டோர்,

நாண் துறந்து உழல்வோர், நட்பானவரை

வஞ்சிப்போர், நன்மை

வேண்டிடாது இகழ்ந்து, தீமை செய்பவர், விருந்தை

நீப்போர்,

பூண்டு மேல் வந்த பேதை அடைக்கலம் போக்கி

வாழ்வோர்.

 
1119.

'கயிற்றிலாக் கண்டத்தாரைக் காதலித்து அணைவோர்

(170-9)

தங்கள்

வயிற்றிடைக் கருவைத் தாமே வதைப்பவர்,

மாற்றார்தம்மைச்

செயிர்க்குவது அன்றிச் சேர்ந்த மாந்தரின் உயிரைச்

செற்றோர்

மயிர்க் குருள ஒழியப் பெற்றம் வௌவுவோர்,

வாய்மை இல்லோர்.

 
1120.

'கொண்டவன்தன்னைப் பேணாக் குலமகள்,

(170-10)

கோயிலுள்ளே

பெண்டிரைச் சேர்வோர், தங்கள் பிதிர்க்களை இகழும்

பேதை,

உண்டலே தருமம் என்போர், உடைப்பொருள்

உலோபர், ஊரைத்

தண்டமே இடுவோர், மன்று பறித்து உண்ணுதும்

தறுகண்ணாளர்.

 
1121.

'தேவதானங்கள் மாற்றி, தேவர்கள் தனங்கள்

(170-11)

வௌவும்

பாவ காரியர்கள், நெஞ்சில் பரிவிலாதவர்கள் வந்து

'கா' எனா, 'அபயம்' என்று, கழல் அடைந்தோரை

விட்டோர்,

பூவைமார்தம்மைக் கொல்லும் புல்லர், பொய்ச் சான்று

போவோர்.