பக்கம் எண் :

692யுத்த காண்டம் 

1122.

'முறையது மயக்கி வாழ்வோர், மூங்கை அந்தகர்க்குத்

(170-12)

தீயோர்,

மறையவர், நிலங்கள் தன்னை வன்மையால் வாங்கும்

மாந்தர்,

கறை படு மகளிர் கொங்கை கலப்பவர், காட்டில்

வாழும்

பறவைகள், மிருகம், பற்றிப் பஞ்சரத்து அடைக்கும்

பாவர்.

 
1123.

கார்க் கன வரை சேர் கானில் கடுங் குழி கல்லும்

(170-13)

கட்டர்,

நீர்க் கரை அதனில் ஒட்டி நெடுங் கலை முயல் மான்

கொல்வோர்,

ஊர்க் கெழு கூவல் வீழ்ந்த உயிர்ப் பசு எடாது

போவோர்,

வார்க் கெழு தன் மின்னாரை வழியில் விட்டு ஏகும்

மாக்கள்.

 
1124.

வழி அடித்து உண்போர், கேட்டால் வழி

(170-14)

சொல்லாதவர்கள், வைப்பைப்

பொழி இருள் களவு காண்போர்

பொய் சொல்லிப் பண்டம் விற்போர்,

அழிவு இலா வாய்மை கொன்றோர்

அடைந்தது..................................

...............................................................

தெரிசிக்கத் தீர்க என்றான்.

 
1125.

'ஆதியர் மூவர்க்கு அந் நாள், அரு மறை அறைந்த

(170-15)

அந்த

நீதியாம் புராணம்தன்னை இகழ்பவர், நிறையக்

கேளார்,

பாதியில் விட்டு வைப்போர், படித்தவர்ப்

பிரியப்படுத்தார்,

போதம் இலாதார்' ''மற்றச் சமயம் பொல்லாதது''

என்பார்.