| 1126. | 'என்று இவர் முதலா மற்றும் எழு நரகு அடையும் | (170-16) |
பாவம் |
ஒன்றிலர், நன்றிதன்னை மறந்தவர் ஒழிய உள்ளோர் |
துன்றிய வினைகள் எல்லாம், சுடர் கண்ட இருளே |
போல, |
தென் திசை வந்து, சேதுத் தரிசிக்க, தீரும்' |
என்றான். |
| | |
| 1127. | ஆங்கது கேட்டு, அருந்ததியே அனையாளும், | (170-17) |
'அவதியுடன் |
தீங்கு அணுகும் செய்ந் நன்றி மறந்திடும் தீ |
மனத்தோர்கள் |
தாங்க அரும் பாவங்களையும் எனக்காகத் தவிர்க்க' என, |
'நீங்கிடுக அதுவும்' என்றான் - நிலமடந்தை பொறை |
தீர்த்தான். |
| | |
| 1128. | 'பார் எழுவி வாழ்வோர்கள் பஞ்ச மா பாதகமும் | (170-18) |
சீர் எழுவு திரு அணையைத் தெரிசிக்கத் தீர்க' என, |
கார் எழுவு திரு மேனிக் கண்ணன் நினைப்பின்படியே |
ஈர் - எழுவர் நால்வர் என்னும் இருடிகளும் |
எழுதினரால். |
| | |
| 1129. | 'பார் மேவும் மாந்தர்கள் செய் பஞ்ச மா பாதகமும் | (170-19) |
சீர் மேவும் திரு அணையைத் தெரிசிக்கத் தீர்க' |
எனா, |
கார் மேவும் திரு மேனிக் காகுத்தன் கட்டுரைத்து, |
வார் மேவும் முலைச் சனகி மாதோடும் |
வழிக்கொண்டான். |
| | |
| 1130. | என்பன பலவும் அந்த ஏந்திழைக்கு இருந்து கூறி, | (170-20) |
தன் பெருஞ் சேனையோடும் தம்பியும் அரக்கர் |
கோவும் |
பொன் பொரு விமானம்தன்மேல் போகின்றபோது, |
மிக்க |
இன்புடை இராமன் வேலைக்கு இப்புறத்து இழிந்து, |
என் செய்வான். |