| 1131. | முன் பெல அரக்கன்தன்னை முனி கொலை | |
| தொடரக், கண்டு, ஆங்கு | |
| 'அன்பினால் அரி பால் தோன்றும் அரனை | |
| அர்ச்சித்தால் அன்றி, | |
| துன்பமே தொடரும் பொல்லாச் சூழ் கொலை | |
| தொலையாது' என்று ஆங்கு | |
| இன்புறும் இராமன் வேலைக்கு இப் புறத்து இழந்து | |
| நின்றான். | (170-21) |
| | |
| 1132. | திருவணை உயர் பதம் செப்பி மீண்டபின், | |
| அருகு அணை திருமகட்கு, ஆங்கு மற்று உள | |
| தரு அணை திரள் புயச் சனக வல்லிக்கு, ஆம் | |
| கரு வரை முகில் நிற வண்ணன் காட்டுவான். | |
| | (170-22) |
| | |
| 1133. | கப்பை எனும் கன்னியையும், கந்தனார் தாதையையும் | |
| அப்பொழுதே திருவணைக்குக் காவலராய் அங்கு | |
| இருத்தி, | |
| செப்ப அரிய சிலையாலே திருவணையை வாய் கீறி, | |
| ஒப்பு அரியாள்தன்னுடனே, உயர் சேனைக் | |
| கடலுடனே. | (170-23) |
| | |
| 1134. | வேந்தர் வேந்தனும் வேலையின் கரையினில் வரவே, | |
| வாய்ந்த சாய்கையும் வந்தது; வானவர் வணங்க, | |
| ஏந்து தோள் புயத்து இராமனும், இலக்குவன்தானும் | |
| வாய்ந்த சீதையும், மானமும், வானர வேந்தும். | |
| | (170-24) |
| | |
| 1135. | பாய்ந்த வேலையின் கரையிடைப் பரமன் அங்கு | |
| உறவே, | |
| சாய்ந்த சாய்கையும் வந்து, அணுகாது அயல் கிடக்க, | |
| ஏந்து திண் புயத்து இராமனும், இளையவன்தானும் | |
| வாய்ந்த சீதையும், சேனையும், மற்றுள பேரும். | |
| | (170-25) |