பக்கம் எண் :

 மிகைப் பாடல்கள்695

1136.

நின்ற போதினில், நிகர் இலா அகத்தியன் முதலோர்

குன்றுபோல் புயத்து இராகவன்தனை வந்து குறுக,

''நன்று நின் வரவு'' என்னவே, நாதனும் வணங்கி,

வென்றி வேந்தனும் வேதியர்தம்மொடு வியந்து.

(170-26)
 
1137.

சேதுவின் கரை சேர்ந்த அத் திறல் புனை இராமன்

'ஏது இத் தலம்?' எனக் குறுமுனிவனைக் கேட்ப,

'வாத ராசனும் வாசுகிதானும் முன் மலைந்த

போது, தந்தது, இப் பொன் நகர்' என்று அவன்

புகன்றான்.

(170-27)
 
1138.

புகன்றவன்தனைப் பூங் கழல் இராகவன் சாய்கை

அகன்ற காரணம் குறுமுனி உரைசெய, அவனும்,

'பகர்ந்த தேவரும், பாற்கடல் பள்ளியான், பரமன்

புகுந்தது இவ் வழி; பூவில் வந்தவனும், மற்று யாரும்.

(170-28)
 
1139.

'இருப்பது இத் தலம்; ஆகையால், இராவணன்

சாய்கை

அருத்தி இன்றியே, அகன்றது' என்று அருள் முனி

அறைய,

பெருத்த தோளுடை அண்ணலும் பிரியம் வந்து எய்தி

'கருத்து மற்று இனி உரை' என, குறுமுனி கழறும்;

(170-29)
 
1140.

'இந்த மா நகர் தன்னிலே இறைவனை அருச்சித்து,

உன்தன் மா நகர் எய்தினால், சாய்கை போம்,

உரவோய்!

'அந்த நீதியே செய்தும்' என்று, அனுமனை

அழைத்திட்டு,

'எம்தம் நாதனை இமைப்பினில் கொடுவருக'

என்றான்.

(170-30)
 
1141.

அந்த வேலை, முனிவன் அளி தெருள்

இந்த மா நிலத்து யாவரும் இன்புற