பக்கம் எண் :

698யுத்த காண்டம் 

முனம் அதை ஏத்தி, பின் இம் மூர்த்தியை ஏத்தும்'

(170-37உ)

என்ன,

அனைவரும் அமரர்தாமும் அம் முறை ஏத்தி

நின்றார்.

 
1153.

விழுந்தவன்தனை வெந் திறல் இராகவன் நோக்கி

(170-38)

'அழுந்து சிந்தையாய்! அறிவு இலாது அதனை என்

செய்தாய்?

பொழிந்து மா மலர் இட்டு நீ அருச்சி' என்று

உரைப்ப,

எழுந்து போய், அவன், இறைவனை அருச்சனை

செய்தான்.

 
1154.

அவ் இடத்து, 'அனுமன் தந்த, கங்கைமேல்

(170-39)

வவ்விடப்படும் வந்திடுவான் சிலை

இவ் இடத்தினில் யாவரும் ஏத்து, எனா,

தெவ் அடக்கும் சிலையவன் செப்பினான்.

 
1155.

'எம்தன் நாதன் இவன்' என்று இறைமகன்

(170-40)

தந்த நாமம் சராசரம் சார்ந்தபோது

இந்திரன், பிரமா முதல் எய்தினார்;

வந்து, வானவர் யாவரும் வாழ்த்தினார்.

 
1156.

'இத் தலத்தினில் யாரும் அங்கு ஓர் சிலை

(170-41)

வைத்து மா மனத்து உள்ளே வழுத்துவார்,

நத்து உலாய கை நாரணன், நான்முகன்,

பித்தன், மூவரும் ஏத்தப் பெறுக' எனா.

 
1157.

என்று, இராகவன் ஈசன் பெருமையின்

(170-42)

நன்றிதன்னை நவில, அடங்குமோ?

சென்ற சென்று, 'செய, செய! போற்றி!' என்று

அன்று இராச குமாரன் அறைகுவான்:

 
1158.

பூசனைத் தொழில் முடிந்தபின், பூங் கழல் இராமன்

தேவத் தச்சனை அழைத்து, 'நீள் திரைக் கடல்

கிடந்த