பக்கம் எண் :

 மிகைப் பாடல்கள்699

காவல் மா மலை கொணர்ந்து, நீ கண்ணுதல்

(170-43)

கோயில்

பூவில் வந்தவன் சொல்வழிச் சமை' எனப் புகன்றான்.

 
1159.

நந்தியம் பதி இறைவனை நாதனும் அழைத்தே,

(170-44)

'இந்த மா மலை இரும்', என, யாவையும் நல்கி,

'விந்தை தங்கிய தோளினீர்! வேந்தனைப் பூசித்து,

இந்த மா நகர் இரும்' என, இராமனும் அகன்றான்.

 
1160.

போன காலையில், பூங் கழல் இராகவன் பின்னே

(170-45)

சேனை தான் வர, தேவர்கள் யாவரும் வணங்கி,

மேல் நிலத்தவர் சென்றிட, விடை கொடுத்தருளி,

தானும், சீதையும், தம்பியும், சேதுவைச் சார்ந்தார்.

 
1161.

தேர் ஏறி, மா நாகம் சென்னிமிசைச் சென்று ஏற,

(170-46)

கார் ஏறு கண்ணபிரான், காவலன் கமழ் துளபத்

தார் ஏறு தடந் தோளான், தனி வயிரக் குனி சிலைக்

கைப்

போர் ஏறு, பொலிவுடனே வட திசையில்

போயினனால்.

 
1162.

சேர்ந்து, சேதுவின் தென் கரை கடந்து, வந்து எய்தி,

(170-47)

கூர்ந்த மானமேல் இருந்தவன் வட திசை குறுகிப்

போந்து, வானரப் புதுமையும் சனகிக்குப் புகன்று,

தீர்ந்த சேதுவின் கரையையும் காட்டினன், திறலோன்.

 
1163.

வரையலுற்றான், மலர்க் கரத்து இருந்த வன்

சிலையால்,

(170-48)

திரையில் உற்றிட மரக்கலத் தொகுதிகள் செல்ல,

விரைவில் உற்றிடும் விமானத்தின் மீதினில் இருந்தே;

உரை செய்து உற்றனன், சனகிக்குப் பின்னும் அங்கு

உரவோன்.