'நீறு பூசியும் நேமியும் - திருநீறு பூசிய சிவனும், சக்கரப் படை தாங்கிய திருமாலும்; மாறு குன்றொடு வேலை மறைந்துளார் நீங்கினார் - மேடும் பள்ளமுமாய் மாறுபட்டுள்ள மலையிலும் கடலிலும் மறைந்துள்ளவர்களாய் (முன்பு உன் எதிரில் வராமல்) விலகிக்கொண்டனர்; ஊறு நீங்கினராய், உவணத்தினோடு ஏறும் ஏறி உலாவுவார்' என்னுமால்- (இப்பொழுது) துன்பம் நீங்கப் பெற்றவராய் கருடன் மீதும் ஏற்றின் மீதும் ஏறிக்கொண்டு உலாவுவார்கள்' என்று கூறுவான். |
நீறு பூசியும் நேமியும் குன்றொடு வேலை மறைந்துளார் என்பது நிரல் நிறைப் பொருள்கோள். 'உவணத்தினோடு ஏறும் ஏறி' என்பது எதிர் நிரல் நிறைப்பொருள்கோள். |
(12) |
9198. | 'வான மானமும், வானவர் ஈட்டமும், |
| போன போன திசை இடம் புக்கன, |
| தானம் ஆனவை சார்கில; சார்குவது, |
| ஊன மானிடர் வென்றிகொண்டோ?' எனும். |
|
'வானவர் ஈட்டமும் வானமானமும் - தேவர்களின் கூட்டமும் அவர்கள் ஏறிச் செல்லுதற்குரிய வானவிமானமும்; போன போன திசை இடம் புக்கன- (இந்திரசித்தின் முன்னிற்கவியலாது) போன போன திசையிடங்களில் புகுந்தனவாய் மறைந்திருந்து,; தானம் ஆனவை சார்கில சார்குவது- தம் இருப்பிடத்தை இதுகாறும் சேர்ந்தில, அவை மீண்டும் சேர்வது; ஊன மானிடர் வென்றி கொண்டோ?' எனும் - குறைபாடுடைய மனிதர்களின் வெற்றியைத் துணையாகக்கொண்டு தானோ?' என்பான். |
மானம் - விமானம் என்பதன் முதற்குறை. 'ஈட்டம்' என்னும் அஃறிணை 'சார்கில' என்னும் அஃறிணை முடிவு கொண்டது. தானம் - ஸ்தானம் அவரவர் இருப்பிடமாம். உயர்வுடைய தேவர்கள் குறைபாடுடைய மனிதர்கள் பெற்ற வெற்றியைத் துணையாகக் கொண்டு தத்தம் தானத்தை அடைவது பெருமைக்குரியதாயிற்றோ? என்றவாறு. |
(13) |
9199. | 'கெட்ட தூதர் கிளத்தினவாறு ஒரு |
| கட்ட மானிடன் கொல்ல, என் காதலன் |
| பட்டு ஒழிந்தனனே!' எனும்; பல் முறை |
| விட்டு அழைக்கும்; உழைக்கும்; வெதும்புமால். |