குறைத்து - உடல்கள் சிதையும்படி வெட்டி; உயிர் உண்பென்- உயிரைக் குடிப்பேன்; நீயிர் ஒருங்கே போய் - நீங்கள் யாவரும் ஒன்றாகச் சென்று; மற்றவர் ஆன இருவரை - வானரர் தவிர இராம இலக்குவராகிய இருவரை; கோறிர்- கொல்லுவீர்களாக; என்று அறைந்தான்- என்று கட்டளை இட்டான். |
தானவர் - அரக்கரில் ஓர் இனத்தார். இராவணன் இவர்களை அழித்த செய்தி உத்தரகாண்டத்துள் பேசப்படுகிறது என்பர். |
(1) |
9300. | என உரைத்தலும், எழுந்து, தம் இரதமேல் ஏறி, |
| கனை திரைக் கடல் சேனையைக் கலந்தது காணா, |
| 'வினையம் மற்று இலை; மூல மாத் தானையை |
| விரைவோடு |
| இனையர் முன் செல, ஏவுக!' என்று இராவணன் |
| இசைத்தான். |
|
என உரைத்தலும் - மேற்கண்டவாறு இராவணன் கட்டளை இட்டவுடனே; எழுந்து- புறப்பட்டு; தம் இரதம் மேல் ஏறி - தங்களுக்குரிய தேர்களில் ஏறி; கனை திரைக் கடல் சேனையைக் கலந்தது காணா- ஒலிக்கும் கடல்மேல் பரந்த தம் சேனைகளோடு அரக்கத் தலைவர்கள் சென்று சேர்ந்ததைக் கண்டு; வினையம் மற்று இலை - இனிச் செய்யத்தக்க பணி வேறு இல்லை; மாமூலத் தானையை - பெரிதாகிய மூல பல சேனையை; இனையர் முன் விரைவோடு செல ஏவுக என்று - இப்போது போருக்குப் போகின்ற இவர்களுக்கு முன்னே வேகமிகச் செல்லும்படியாக ஏவுவீர்களாக என்று; இராவணன் இசைத்தான் - இராவணன் (மேலும்) கட்டளை இட்டான். |
(2) |
9301. | ஏவி அப் பெருந் தானையை, தானும் வேட்டு |
| எழுந்தான், |
| தேவர் மெய்ப் புகழ் தேய்த்தவன், சில்லிஅம் |
| தேர்மேல், |
| காவல் மூவகை உலகமும் முனிவரும் கலங்க, |
| பூவை வண்ணத்தன் சேனைமேல் ஒரு புறம் |
| போனான். |
|
அப்பெருந்தானையை ஏவி - அந்தப் பெரிய மூலபலச் சேனையை இராமனை எதிர்த்தழித்திடுமாறு ஏவியபின்; தேவர் |