| 1164. | 'நின்னை மீட்பதே நினைந்து, சில் நெறி எலாம் நீந்தி, | |
| என்னை ஈட்டிய திறத்தினில் திருவுடன் இருப்ப, | |
| சொன்ன வேற் படை அரக்கரைக் குறைத்த இச் | |
| சேனை | |
| மன்னனால் பெற்ற வலி இது; வென்றியும் அதனால். | |
| | (170-49) |
| | |
| 1165. | 'தேய்ந்த மா மதி போலும் சிலைநுதல்! | |
| வாய்ந்த வானர வாரணம், மாருதி, | |
| ஆய்ந்த மா மணி ஆழியை அன்றுதான் | |
| பாய்ந்த வெற்பு மயேந்திரம் பார்த்தியால். | (171-1) |
| | |
| 1166. | 'மாருதி நின்னை நாடி வருபவன், ஏறிப் பாயப் | |
| பாரிடைக் குளித்து நின்ற பவள மால் வரையைப் | |
| பாராய்; | |
| போரிடைப் பொலன் கொள் பொன் தார்ப் புரவிகள் | |
| போக்கு இற்று என, | |
| நீரிடைத் தரங்கம் ஓங்கும் நெறி கடல் அதனை | |
| நோக்காய்!' | (171-2) |
| | |
| 1167. | ஆரியன் அனைய கூற, அடி இணை இறைஞ்சி, ஐய | |
| வேரி அம் கமலை செப்பும்; 'விரிந்த கிட்கிந்தை | |
| உள்ளார் | |
| சீரிய அயோத்தி சேரத் திருவுளம் செய்தி' என்ன, | |
| கார் நிற அண்ணல், 'மானம் காசினி குறுக' | |
| என்றான். | (173-1) |
| | |
| 1168. | என்றவன் சேயை நோக்கி, இசைந்து, கிட்கிந்தை | |
| உள்ளார், | |
| நன்று நம் பதியைக் காண, நாயக! அழைத்தி' என்ன, | |
| சென்று அவன் சாம்பன்தன்னை, 'திசை எட்டும் | |
| திரியச் சாற்றி, | |
| இன்று நம் சுற்றம் எல்லாம் இயல்புடன் அழைத்திடு' | |
| என்றான். | (174-1) |