பக்கம் எண் :

702யுத்த காண்டம் 

அன்று அது இரவி பெற்று நாயகற்கு ஈந்தது, அன்று

சென்று அடி இணையில் இட்டே, இறைஞ்சியே,

குமையும் நின்றாள்.

(176-4)
 
1174.

நின்றவள்தன்னை நங்கை அம் கையால் தழுவி

நின்று

வன் துணை மங்கைமாரும் மைந்தரும் அங்குச் சூழ

தன் திருக் கைகளாலே தழுவினள் என்னக்

கண்ணால்

ஒன்று அல பலவும் கூற, உணர்ந்து உளம் உவகை

உற்றே.

(176-5)
 
1175.

'கடி கமழ் குழலினாளே! கார்காலம் யாங்கள்

வைகும்

வடிவுடைச் சிகரம் ஓங்கும் மாலியவானை நோக்காய்;

அடு திறல் பரிதி மைந்தன் நகர்அதன் அழகு பாராய்

வடிவு உள மலை ஏழ் அன்ன மராமரம் ஏழும்

நோக்காய்.

(177-2)
 
1176.

'கனி வளர் பவளச் செவ் வாய்க் கனங் குழை!

நின்னைக் காணாத்

துனி வளர் துன்பம் நீங்க, தோழமை நாங்கள்

கொண்ட

பனி வளர் இருளை மாற்றும் பகலவன் சேயும் யாமும்

நனி வளர் நட்புக் கொண்ட நலம் தரு நாகம்

நோக்காய்.

(177-2)
 
1177.

'மாழை ஒண் கண்ணாய்! உன்னைப் பிரிந்து யான்

வருந்தும் நாளில்,

தாழ்வு இலாத் துயரம் நீங்க, தாமரை உந்தியான் கை

ஆழி அம் ஆற்றலானை, அனுமனை, அரக்கர்

அஞ்சும்,

பாழியான்தன்னை கண்ட பம்பையாறு அதனைப்

பாராய்.

(177-3)