பக்கம் எண் :

 மிகைப் பாடல்கள்703

1178.

''பொய் வித்தி, வஞ்சம் காத்து, புலை விளைத்து,

அறைத்தைத் தின்றோன்

கை வித்தும் சாத்தினான் அக் கடல் பெரும்

படையை எல்லாம்

நைவித்த இரவு நான்கால் மருந்துக்கு நடந்து, நம்மை

உய்வித்த வீரன்தன்னைக் கண்ட இடம் உது

கண்டாயே.

(177-4)

 

1179.

'சவரியது இருக்கைதானும், கவந்தனைத் தடிந்த

கானும்,

இவர் செய எழுந்த ஆற்றல் கரன் உயிர் இழந்த

பாரும்,

சவையுறு சுகுட்டன் மைந்தன், சரவங்கன் முதலோர்

காதல்

கவை அறு முனிவர்தங்கள் இடங்களும் கருதி

நோக்காய்.

(177-5)
 
1180.

'விரை கமழ் ஓதி மாதே! விராதன் வந்து எதிர்ந்து

போர் செய்

நிரை தவழ் அருவி ஓங்கும் நெடு வரை அதனை

நோக்காய்;

'சரதம் நான் அரசு வேண்டேன்; தடமுடி சூடுக'

என்று

பரதன் வந்து அழுது வேண்டும் பரு வரை அதனைப்

பாராய்.

(177-6)
 
1181.

'வளை பயில் தளிர்க் கை மாதே! வரு புனல்

பெருகக் கண்டு,

துளை பயில் வேயின் தெப்பம் இயற்றி, யான் துயரம்

இன்றி,

விளைதரு புனலை நோக்கி வியந்து உடன் இருப்ப,

வெல் போர்

இளையவன் தனியே நீந்தும் யமுனை யாறு இதனைப்

பாராய்.

(177-7)