| 1182. | பயன் உறு தவத்தின் மிக்க பரத்துவன் இருக்கை | |
| பாராய்; | |
| கயல் பொரு கங்கை யாறும், குகன் உறை நகரும், | |
| காணாய்; | |
| அயன் முதல் அமரர் போற்ற அனந்தன்மேல் | |
| ஆதிமூலம் | |
| துயில் வரும் கடலே அன்ன அயோத்தியைத் தொழுது | |
| நோக்காய். | (177-8) |
| | |
| 1183. | என்று உரைத்து, இளவலோடு சனகியும், இரவி | |
| சேயும் | |
| வென்றி வீடணனும், சேனை வெள்ளமும் விளங்கித் | |
| தோன்ற, | |
| பொன் திகழ் புட்பகத் தேர் பூதலத்து இழிய ஏவி, | |
| இன் துணைப் பரத்துவாசன் இடவகை இழிந்தான் | |
| அன்றே. | (177-9) |
| | |
| 1184. | என்று, மன்னவன் பற்பல புதுமையும் யாவும் | |
| மன்றல் அம் குழல் சனகிக்குக் காட்டினன், மகிழ்ந்து | |
| குன்று துன்றிய நெறி பயில் குடதிசைச் செவ்வே | |
| சென்று, கங்கையின் திருநதித் தென் கரை | |
| சேர்ந்தான். | (182-1) |
| | |
| 1185. | ஆர்த்து, விண்ணவர் ஆடினர்; ஆடகத் தேரும் | |
| பேர்த்த போதினில் நிலமிசை அணுகுற, பெரியோர்க்கு | |
| ஆர்த்தம் ஆகிய அடல் கரு மலை என நடந்து | |
| தீர்த்தம் ஆகிய கங்கையின் தென் கரை சேர்ந்தான். | |
| | (182-2) |
| | |
| 1186. | மான மானம் மீப்போனது, வட திசை வருவது | |
| ஆன காலையில், அறிவனும் ஆயிழை அறிய, | |
| சேனையோர் திறல் சேது வான் பெருமையும் செப்ப, | |
| தானமாகிய தீர்த்தம் ஆம் திரு நதி சார்ந்தார். | (182-3) |
| | |
| | |
| 1187. | 'பாகம் மங்கையோடு அமர்ந்தவன் பயில்வுறு கங்கை | |
| ஆகும் ஈது' என அறநெறி வழுவுறா அலங்கல் | |