பக்கம் எண் :

 மிகைப் பாடல்கள்705

மேக வண்ணனும் துணைவரும் வியந்து உடன் ஆடி

தாகம் நீங்கினர்; அவ் இடைத் தேவரும் சார்ந்தார்.

 

(182-4)
 
1188.

இறுத்த தேரினை இருடிகள் எவரும் வந்து எய்தி,

வெறித் துழாய் முடி வேத மெய்ப் பொருளினை

வியவா,

'புறத்ததாம் உயிர் பெற்றனம்' என அகம் பொங்க,

திறத்து இராமன்பால் திருமுனி அவனும் வந்துற்றான்.

(182-5)
 
1189.

வந்த மா முனிவோர்களை வணங்கும் முன், அவர்கள்

'எந்தை! நீ இன்று இங்கு இருந்து, உள வருத்தமும்

நீக்கி,

செந்து, நாளை அத் திருநகர் அடைக' எனச் செப்பி

உந்து சித்திரகூடத்துள் யாரும் வந்துற்றார்.

(186-1)
  
1190.

'தகும் அருந் தவங்கள் ஈட்டி, தசமுகத்து அரக்கன்

பெற்ற

யுகம் அரைக் கோடிகாறும் ஏவல் செய்து உழலும்

தேவர்

சுகம் உற, சிலை கைக் கொண்ட தொல் மறை

அமல! யார்க்கும்

இக பரம் இரண்டும் காக்கும் இறைவன் நீ அன்றி

உண்டோ?'

(188-1)

 

1191.

இந்த வாசகம் இயம்பினன், பின்னரும் இசைப்பான்,

'எந்தை! நீ இன்று இங்கு இருந்து உள வருத்தமும்

போக்கி

சிந்தை அன்பு செய் திருநகர் நாளை நீ சேர்க!'

என்று

அந்தம் இல் பரத்துவன் சொல, அவ் இடத்து

அடைந்தான்.

(189-1)