பக்கம் எண் :

706யுத்த காண்டம் 

1192.

அடைந்த மா முனித் தலைவனை அருச்சனை செய்து,

மிடைந்த சேனைஅம் பெருங் கடல் சூழ்தர, மேல்

நாள்

கடைந்த பாற்கடல் கண் துயில் நீங்கி, வானவர்கள்

படிந்து போற்றிட இருந்தென, பரிவுடன் இருந்தான்.

 

(189-2)
 
1193.

இருந்தபோது, இராமன்தன்னை இருடியும் இயம்பும்;

எந்தாய்!

பெருந் திறல் இலங்கைதன்னை எங்ஙனம்,

பெரியோய்! நீயே

வருந்தினை, குரங்கு கொண்டு, மாய வல் அரக்கன்

தன்னைத்

திருந்த அப் போரில் வென்று மீண்டவா செப்புக!

என்றான்.

(189-3)
 
1194.

இராகவன் அவனை நோக்கி, 'இறந்த வாள் அரக்கர்

எல்லாம்

அராவின் மாருதியும், மேன்மை வீடணன்தானும்,

ஆங்கே

குராவருஞ் சேனை எல்லாம் கொன்றிட, கொற்றம்

கொண்டு

விராவியே மீண்டது' என்று, மீளவும் பகரலுற்றான்:

 

(189-4)
 
1195.

'தந்திரம் உற்ற சேனை தரைப்பட, மறுப்படாமல்

அந்தரம் உற்ற போது, அங்கு அரு மருந்து அனுமன்

தந்தான்;

மந்திர வித்தே! எம்பி வரி சிலை வளைத்த போரில்

இந்திரசித்தும் பட்டான்; இலங்கையும் அழிந்தது

அன்றே.

(189-5)
 
1196.

'கறங்கு கால் செல்லா, வெய்ய கதிரவன் ஒளியும்

காணா,

மறம் புகா, நகரம்தன்னில் வானவர் புகுதல் வம்பே;