| திறம் புகாது அவிரும் நாளும் சிதைவு இலர்; தேரும் | |
| காலை, | |
| அறம் புகா மறத்தினாலே அழிந்தது அப் பதியும், | |
| ஐயா! | (189-6) |
| | |
1197. | 'மறக் கண், வெஞ் சினத்தில் வன்கண், வஞ்சக | |
| அரக்கர் யாரும் | |
| இறக்க, மற்று இறந்தது எல்லாம் எம்பிதன் ஈட்டின், | |
| எந்தாய்! | |
| பிறப்பு மேல் உளதோ? சூழ்ந்த பெருந் திசை பேரின், | |
| பேராத் | |
| துறக்கத்தோ, யாதோ, பெற்றார்? அறிந்தருள், சுருதி | |
| நூலோய்! | (189-7) |
| | |
1198. | என்ற வாசகம் இருந் தவன் கேட்டு, இகல் இராமன் | |
| தன் துணைப் பெருந் தம்பியைத் தழுவி, 'நீ | |
| தக்கதோய்! | |
| வென்று மீண்டிலைஆயின், அவ் விண்ணவர் முனிவர் | |
| பொன்றுமாறு அன்றி, ஆர் உயிர் புரப்பது ஒன்று | |
| உளதோ? | (189-8) |
| | |
1199. | மாதவன் சொன்ன வாய்மையை மனங்கொண்டு, | |
| மறையோன் | |
| பாதம் முந்துற வணங்கி, மா முனிவனைப் பாரா, | |
| 'ஏதும் யான் செய்தது இல்லை; அவ் இலங்கைமேல் | |
| வெகுண்டு | |
| வேத நாயகன் புருவத்தை நெரித்தனன்; விளிந்தார். | (189-9) |
| | |
1200. | 'அன்றியும் பிறிது உள்ளது ஒன்று உரைசெய்வென்; | |
| அது அத் | |
| துன்று தார் புனை மாருதி பெரும் புயத் துணையால் | |
| வென்றி கொண்டனம், யாங்கள், மேல் விளம்புவது | |
| எவனோ?' | |
| என்று இயம்பினன், இருடிக்கும் இளவலும் இயைந்தே. | (189-10) |