பக்கம் எண் :

708யுத்த காண்டம் 

1201.

அனுமன் என்பவன் வாள்முகம் நோக்கினன்; அவனும்

புனித மா தவன்தனைத் தொழா, 'புண்ணியப்

பொருளாம்

தனு வலம் கொண்ட தாமரைக்கண்ணவன் தனயன்

எனும்அது என்கொலோ? யாவர்க்கும் தந்தை நீ'

என்றான்.

(189-11)
 
1202.

அங்கு அவன் சொல, அனுமனும் உரைசெய்வான்,

அருணப்

பங்கயந்தனில் சீதையாம் பராபரையாட்டி

சங்கரன் அயன்தன்னையும் தரணி ஈர்-ஏழும்

தங்கு பொன் வயிற்று அன்னைதன் தன்மையை

நிகழ்த்தும்.

(189-12)
 
1203.

'இராகவன் பெருங் குலத்தையும், இப் பெருஞ்

செல்வத்

தராதலம் புகழ் சனகன்தன் மரபையும், தந்து, என்

பராபரத்தினைப் பங்கயத்து அமுது எனப் பணிந்தாள்:

புராதனர்க்கு அரசே!' என மாருதி புகன்றான்.

(189-13)
 
1204.

அன்ன வாசகம் கேட்டலும், அந்தணர் கோவும்,

'என்ன வாசகம் சீதைக்கு இன்று இயம்புவது, யாம்?

என்று,

ஒன்றும் வாசகம் உரைத்திலன்; உள் அன்பு குளிர,

'அன்னை வாசவன் திருவினைத் தந்தது' என்று

அறைந்தான்.

(189-14)
 
1205.

பண் குலாவிய சுக்கிரீவன்தனைப் பாரா,

கண்குலா மனம் களித்தவன் கழல்மிசைப் பணிந்து,

மண்குலாம் புகழ் வீடணன், 'நீலனே முதலாம்

எண்கின் வேந்தனும் அழித்தனர் இலங்கையை'

என்றான்.

(189-15)