பக்கம் எண் :

 மிகைப் பாடல்கள்709

1206.

என்று அவன் இயம்பக் கேட்டு, அங்கு இருந்த மா

தவனும், 'இந்த

வென்றிஅம் தானைக்கு எல்லாம் விருந்தொடு சயனம்

மேவிக்

குன்று என வருக!' என்று கூறலும் இமையோர்

நாட்டில்

அன்று இனிது அரம்பைமார்கள் அமுது எடுத்து

ஆங்கு வந்தார்.

(189-16)
 
1207.

பான நெய்யுடன் நானமும் சாந்தமும் பல் பூண்

ஏனை வானவர் மகளிர்கள் ஏந்தி வந்து, இழிந்தார்;

ஆன மெய்ப்படை தம்முடைப் போகத்துள் அழுந்த,

ஆன கற்பினாளுடன் எழுந்து, இராமனும் அறைவான்.

 

(189-17)
 
1208.

முனிவன் வாள் முகம் நோக்கி, 'மெய் முழுது உணர்

முனியே!

அனுமன் ஆண்தகை அளித்த பேர் உதவி இன்று

எம்மேல்

நினையவும், உரை நிரப்பவும், அரிது; இனி, நீதிப்

புனித! உண்டி எம்முடன்' எனப் புரவலன் புகன்றான்.

 

(189-18)
 
1209.

என்ற வாசகம் கேட்டலும், இருந் தவத்து எவரும்,

'நன்று, நாயகன் கருணை!' என்று உவகையின

நவில,

துன்று தாரவன் பாதுகம் தொழுது, 'அருந

தொல்லோய்!

ஒன்று கேள்' என, உவகையின் மாருதி உரைக்கும்:

 

(189-19)
 
1210.

'செய்த மா தவம் உடைமையின், நினக்கு அன்பு 

சிறந்து

பொய் இல் சாதனம் பூண்டனன்; புண்டரீகக் கண் 

ஐய! நின் பெருங் கருணைதான் அடியனேற்கு 

அமையும்;

உய்யுமாறு இதின் வேறு உளதோ?' என்று 

மொழிந்தான்.

(189-20)