மெய்ப்புகழ் தேய்த்தவன் - தேவர்களின் மெய்யான புகழை அழித்தவனாகிய இராவணன்; வேட்டு- போர் செய்தலை விரும்பி; சில்லி அம் தேர்மேல்- சக்கரங்கள் கொண்ட அழகிய தேர் மீது; தானும் எழுந்தான் - தானும் ஏறியவனாய்; காவல் மூவகை உலகமும் - தன் ஆட்சியில் உள்ள மூன்று உலகத்தவரும்; முனிவரும்- முனிவர்களும்; கலங்க - மனம் கலங்கும்படியாக; பூவை வண்ணத்தன் சேனைமேல்- பூவைப் பூவின் நிறம் கொண்டவனாகிய இராமனுக்கு உதவியாக வந்த சேனையை எதிர்த்து; ஒரு புறம் போனான் - (மூலபலப்படை ஒருபுறம் போக) தான் வேறு ஒரு பக்கம் போனான்; |
(3) |
மூல பலப் படையின் சிறப்பு |
9302. | 'எழுக, சேனை!' என்று, யானைமேல் மணி முரசு |
| ஏற்றி, |
| வழு இல் வள்ளுவர் துறைதொறும் விளித்தலும், |
| வல்லைக் |
| குழுவி ஈண்டியது என்பரால், குவலயம் முழுதும் |
| தழுவி, விண்ணையும் திசையையும் தடவும் மாத் |
| தானை, |
|
வழு இல் வள்ளுவர்- தம் கடமையில் குற்றம் இல்லாத (முரசறையும்) வள்ளுவன்மார்; யானை மேல் மணி முரசு ஏற்றிக் - யானை மீது இருந்த அழகிய முரசுகளை அறைந்து; எழுக சேனை என்று - சேனைகள் எழுவதாக என்று; குவலயம் முழுதும் தழுவி - உலகம் முழுவதையும் அளாவி; விண்ணையும் திசையையும் தடவும் மாத்தானை- ஆகாயத்தையும் திசைகளையும் வருடுகின்ற பெரிய (மூலபலச்) சேனையானது; வல்லை- விரைவாக; ஈண்டியது என்பர் - கூடியது என்பர். |
ஆல் - அசை. |
(4) |
9303. | அடங்கும் வேலைகள், அண்டத்தின் அகத்து; அகல் |
| மலையும் |
| அடங்கும், மன் உயிர் அனைத்தும், அவ் வரைப்பிடை |
| அவைபோல |