1211. | திருந்து மா தவன் செய்தது ஓர் பூசனை செய, | |
| ஆண்டு | |
| இருந்தபோது, தன் திருவுளத்து இராகவன் | |
| நினைந்தான்; | |
| 'பொருந்த மா முடி புனைக!' எனப் பொருந்துறான், | |
| போத | |
| வருந்து தம்பிக்கு, 'வருவென் யான்' என்பதோர் | |
| வாக்கை | (189-21) |
| | |
1212. | முனிவன் இம் மொழி கூறலும், முது மறைப் | |
| பெருமான் - | |
| தனை நினைந்து உளம் வருந்திய தம்பிபால் அயரும் | |
| மனம் நெகிழ்ந்து, இரு கண்கள் நீர் வார, அங்கு | |
| அமலன் | |
| நினைவின் முந்துறும் மாருதிக்கு, இனையன | |
| நிகழ்த்தும். | (193-1) |
| | |
1213. | அன்று அவர் தம்மை நோக்கி, அந்த மா தவனும் | |
| 'இந்த | |
| வென்றி அம் தானைக்கு எல்லாம் விருந்தொடு | |
| சயனம் மற்றும் | |
| குன்றினில் அருளும்' என்று கூறலும், வான நாட்டுள் | |
| ஒன்றிய அரம்பை மாதர் அமுது எடுத்து, ஒருங்கு | |
| வந்தார். | (198-1) |
| | |
1214. | மாருதி விடைகொண்டு ஏக, வரதனும் மறையோன் | |
| பாதம் | |
| ஆர் அருளோடு நீட வணங்கினன்; அவனும் ஆசி | |
| சீரிது கூறி, 'சேறி' என்றலும், மானம் சேர்ந்து, | |
| போர் இயல் தானையோடும் பொருக்கென எழுந்து | |
| போனான். | (201-1) |
| | |
1215. | 'மான் நேர் விழியாளுடனே வனம் முன் | |
| போனான் ஒரு நாள்; வரும் நாள் இலதோ? | |
| தேனே! அமுதே! தெளிவே! தெளிவின் | |
| ஊனே! உயிரே! உலகு ஆளுடையாய்! | (201-2) |