1216. | 'அம் பவளச் செவ் வாய், அணி கடகச் சேவகன், | |
| வம்பு அவிழும் சோலைக் கோசல நாடுடை வள்ளல், | |
| எம் பெருமான் என்னை, இழி குணத்து நாயேனை, | |
| 'தம்பி' என உரைத்த தாசரதி தோன்றானோ! | (201-3) |
| | |
1217. | வாழி மலைத் திண் தோள் சனகன்தன் மா மயிலை, | |
| ஏழ் உலகும் ஆளும் இறைவன் மருமகளை, | |
| ''தாழ்வு இல் பெருங் குணத்தாள்தான் உன் | |
| கொழுந்தி; நீ | |
| தோழன்'' என உரைத்த தோன்றலார் தோன்றாரோ!' | |
| | (201-4) |
| | |
1218. | 'துங்க வில் கரத் தோளினார் சொன்ன நாள், | |
| இங்கு வந்திலர், யான் இறப்பேன்' எனா, | |
| மங்கைமாரும் படையும் வன் சுற்றமும் | |
| அங்கு நீர்க் கங்கை அம்பியில் ஏற்றினான். | (201-5) |
| | |
1219. | 'வேத நாதனும், வில்லியும், விரை மலர்த் திருவும் | |
| ஏது செய்யினும், என் உயிர் முடிப்பேன்' என்று | |
| எண்ணி, | |
| ஓத நீரிடை ஓடம்அது உடைத்து, உயிர் விடுவான், | |
| காதலாருடன் கங்கையின் நடுவுறச் சென்றான். | (201-6) |
| | |
1220. | 'கண்ணும் தோளும் வலம் துடிக்கும்; கரை | |
| வண்ணப் புள்ளும் வலியும் வலத்திலே, | |
| எண்ணும் காலையிலே, எழில் மாருதி, | |
| 'அண்ணல் வந்தனன்' என்று உரையாடினான். | (201-7) |
| | |
1221. | உள்ள வான் கிளை ஏற்றி, உயர் குகன் | |
| வெள்ளக் கங்கையின் ஆக்கி, விரைந்து, அவண் | |
| உள்ளும் நெற்றி உடைப்பளவில், புகும் | |
| வள்ளலார் விடும் மாருதி தோன்றினான். | (201-8) |
| | |
1222. | ஓங்கு வாலினை ஒட்டி, அவ் ஓடங்கள் | |
| தீங்கு உறாவகைச் சுற்றி, திருகி, நீர் | |
| ஆங்கு நின்று அங்கு அவை வலித்தான்; அவை | |
| தீங்கு இலாவகை தென் கரை சேர்ந்தவால். | (201-9) |