பக்கம் எண் :

712யுத்த காண்டம் 

1223.

'கை ஆர் வெய்ய சிலைக் கருணாகரற்குக்

காதலுடைத் தோழ-

மை ஆர், சிருங்கவேரபுரம் உடையாய்! மிகு கோசலை

களிறு,

மை ஆர் நிறத்தான், வந்தொழிந்தான், மிதிலை வல்லி

அவளுடனே;

ஐயா! வந்தான் தம்பியோடும்; அடியேன் உய்ய,

வந்தானே.

 (201-10) 
 
1224.

'ஆர்? உனை உரை' என, அனுமன் கூறுவான்;

'சீரிய வாயுவின் தோன்றல்; சீரியோய்!

சூருடை, இராமற்குத் தூதன்' என்று எனது

ஏருடைத் தலையின்மேல் எழுதப்பட்டுள்ளேன்.

(201-11)
 
1225.

பரதனனத் தீயையும் விலக்கி, பாருடை

வரதனை, இராமனை, மாறிக் காண்பது

சரதமே; இனி இறை தாழ்க்க ஒணாது' என,

கரதலத்து ஆழியும் காட்டிப் போயினான்.

(201-12)
 
1226.

பரத்துவன் வருதலும், பரிந்து, இராமனும்

கரத் துணை குவித்தனன், இளைய காளையோடு,

எரித் திற முனியும் ஆசிகள் இயம்பிட,

விருப்பொடும் இடவகை இனிது மேயினான்.

(241-1)
 
1227.

கோவொடு தூசு, நல் குல மணிக் குழாம்,

மாவொடு கரிக் குலம், வாவு தேர் இனம்,

தாவு நீர் உடுத்த நல் தரணிதன்னுடன்,

ஏ வரும் சிலை வலான், யாவும் நல்கினான். 

(258-1)
 
1228.

நின்றவன், 'இவ் வயின் நெடியவன்தனைச் 

சென்று இறைப் பொழுதினில் கொணர்வென், 

சென்று' எனா,

பொன் திணி பொலங் கழல் வணங்கிப் போயினான், 

வன் திறல் மாருதி வளர்ந்த கீர்த்தியான். 

(258-2)
 
1229.

ஆய காலையில், ஐயனைக் கொண்டு, தன் 

தூய காவின் உறைவு இடம் துன்னினான்;