| 'மேய சேனைக்கு அமைப்பென் விருந்து' எனா, | (258-3) |
தீயின் ஆகுதி செங் கையின் ஒக்கினான். |
| | |
1230. | பான நெய்யோடு, நானமும், சாந்தமும், பலவும் | (258-4) |
ஆன வெள்ளிலையோடு அடைக்காய், கருப்பூரம் |
தேன் அளாவிய முக் கனி காயொடு தேன், பால், |
வான நாட்டு அர மங்கையர் மகிழ்ந்து கொண்டு |
இழிந்தார். |
| | |
1231. | கங்கை தரு கழலாற்கும், இளவலுக்கும், | (258-5) |
காரிகைக்கும், |
துங்க முடி வீடணற்கும், சுக்கிரிவப் பெருமாற்கும், |
தங்கு பெருஞ் சேனைக்கும், தனித்தனியே, பொன் |
கலத்தால், |
அங்கு அடைவின் மண்டலம் இட்டு, அணி விளங்க |
நிறைத்தனரால். |
| | |
1232. | வெள்ளை நறும் போனகமும், மிகு பருப்பும், பொரிக் | (258-6) |
கறியும், |
தள்ள அரிய முக்கனியும், சருக்கரையும், நறு நெய்யும், |
எள்ள அரிய பலவிதத்துக் கறியமுதும், இமையவர்தம் |
வள்ளல் முதல் அனைவோர்க்கும் வரிசை முறை |
படைத்தனரால். |
| | |
1233. | நீர் உலவி, நீர் குடித்து, நினைந்திருந்து, ஆகுதி | (258-7) |
பண்ணி, |
கார் உலவு மேனியனும், காரிகையும், இளங் கோவும், |
தேர் இரவி திருமகனும், தென் இலங்கைப் |
பெருமானும், |
போரின் உயர் சேனையுடன் போனகம் பற்றினர், |
பொலிவால். |
| | |
1234. | 'இரவி காதலன், இலங்கையர் கோன், இவர் உதவி | (258-8) |
அரசின் ஆசையது என்னலாம்; அனுமனே! என்பால் |
விரவு காதலின் நீ செய்த உதவிக்கு வேறு |
தருவது ஒன்று இலை, உடன் உணும் தரமது |
அல்லால்' |