பக்கம் எண் :

716யுத்த காண்டம் 

''கிளையொடும் ஏகு'' எனக் கிளத்தி, எங்கணும்

அளை ஒலி முரசுஇனம் அறைவிப்பாய்' என்றான்.

(258-19)
 
1246.

''தோரணம நட்டு, மேல் துகில் பொதிந்து, நல்

பூரணப் பொற் குடம் பொலிய வைத்து, நீள்

வாரணம் இவுளி தேர் வரிசைதான் வழாச்

சீர் அணி அணிக!'' எனச் செப்புவாய்' என்றான்.

(258-20)
 
1247.

பரத்துவன் உறைவிடத்து அளவும், பைம் பொன் நீள்

சிரத் தொகை மதில் புறத்து இறுதி சேர்தர,

வரத் தகு தரள மென் பந்தர் வைத்து, வான்,

புரத்தையும் புதுக்குமா புகறி, போய்' என்றான். 

(258-21)
 
1248.

என்றலும், அவன் அடி இறைஞ்சி எய்தி, அக்

குன்று உறழ் வரி சிலைக் குவவுத் தோளினான்,

நன்று உணர் கேள்வியன், நவை இல் செய்கையன்,

தன் துணைச் சுமந்திரற்கு அறியச் சாற்றினான். 

(258-22)
 
1249.

அவ் உரை கேட்டலும், அறிவின் வேலையான்,

கவ்வை இல் அன்பினால் களிக்கும் சிந்தையான்,

'வெவ் வெயில் எறி மணி வீதி எங்கணும்

எவ்வம் இன்று, அறை பறை எற்றுக!' என்றிட.

(258-23)
 
1250.

'வானையும் திசையையும் கடந்த வான் புகழ்க்

கோனை இன்று எதிர்கொள்வான், கோல மா நகர்த்

தானையும் அரசரும் எழுகதான்' எனா,

யானையின் வள்ளுவர் முரசம் எற்றினார்.

(258-24)
 
1251.

முரசு ஒலி கேட்டலும், முழங்கு மா நகர்

அரசரும் மாந்தரும் அந்தணாளரும்

கரை செயல் அரியது ஓர் உவகை கைதர,

திரை செறி கடல் என, எழுந்து சென்றவால்.

(258-25)