பக்கம் எண் :

 மிகைப் பாடல்கள்717

1252.

'அனகனை எதிர்கொள்க' என்று, அறைந்த பேரி, நல்

கனகம் நல்கூர்ந்தவர் கைப்பட்டென்னவும்,

சனகனது ஊர்க்கு என முன்னம் சாற்றிய

வனை கடிப் பேரியும், ஒத்த ஆம்அரோ. 

(258-26)
 
1253.

அறுபதினாயிரம் அக்குரோணி என்று

இறுதி செய் சேனையும், ஏனை வேந்தரும்

செறி நகர் மாந்தரும், தெரிவைமார்களும்

உறுபொருள் எதிர்ந்தென, உவந்து போயினார். 

(258-27)
 
1254.

அன்னையர் மூவரும், அமரர் போற்றிட,

பொன் இயல் சிவிகையின் எழுந்து போய பின்,

தம் நிகர் முனிவரும் தமரும் சூழ்தர,

மன்னவன் மாருதி மலர்க்கை பற்றுறா. 

(258-28)
 
1255.

திருவடி இரண்டுமே செம் பொன் மௌலியா,

இரு புறம் சாமரை இரட்ட, ஏழ் கடல்

வெருவரும் முழக்கு என வேழம் ஆர்த்து எழ,

பொரு அரு வெண்குடை நிழற்ற, போயினான். 

(258-29)
 
1256.

எல்லவன் மறைந்தனன் - என்னை ஆளுடை

வில்லியை எதிர் கொள, பரதன் மீச் செல்வான்,

அல்லி அம் கமலமே அனைய தாள்களில்

கல் அதர் சுடும் தன கதிரின் என்னவே. 

(258-30)
 
1257.

அவ் வழி மாருதி அம் கை பற்றிய

செவ் வழி உள்ளத்தான், 'திருவின் நாயகன்,

எவ் வழி உறைத்தது? அச் செயல் எலாம் விரிந்து,

இவ் வழி எமக்கு நீ இயம்புவாய்' என்றான். 

(258-31)
 
1258.

என்றலும், மாருதி வணங்கி, 'எம்பிரான்

மன்றல் அம் தொடையினாய்! அயோத்தி மா நகர்

நின்றதும், மணவினை நிரப்பி மீண்டு கான்

சென்றதும், நாயினேன் செப்பல் வேண்டுமோ?' 

(258-32)