பக்கம் எண் :

718யுத்த காண்டம் 

1259.

''ஏடுணர் அலங்கல் மார்பத்து இராவணன்

முதலோர்க்கு எல்லாம்

வீடணன் கடன்கள் செய்து மீண்டனன்; அவனுக்கு

இன்னே

சூடுக மௌலி'' என்ன, சந்தர இராமன் தம்பி

மாடு அணை துணைவரோடும் மகுடமே புனைந்து

விட்டான். 

(258-33)
 
1260.

தோன்றலும், சுமந்திரன் தொழுத கையினன்,

ஈன்று, காத்து, அழித்து, அவை இயற்றும் அவ் உரு

மூன்றுமாய் நான்குமாய் ஐந்துமாம் முதல்

சான்றினைப் பரதற்குச் சுட்டி, சாற்றுவான். 

(305-1)
 
1261.

அப் பொழுது அவ் வயின் அடைந்துளோர்களைத்

'தப்பு அறக் காண்பென்' என்று ஐயன் தன் மனத்து

ஒப்பு அற எண்ணும் முன், உம்பர் நாடு வந்து

இப் புறத்து இழிந்தென இழிந்த, மானமும். 

(317-1)
 
1262.

அவ் வயின், 'அயோத்தி வைகும் சனமொடும்,

அக்குரோணி

தவ்வல் இல் ஆறு பத்து ஆயிரமோடும், தாயரோடும்

இவ் வயின் அடைந்துளோரைக் காண்பென்' என்று

இராமன்

செவ்வையின் நிலத்தை வந்து சேர்ந்தது,

விமானம்தானும்.

(317-2)
 
1263.

எவ் வயின் உயிர்கட்கும், இராமன் ஏறிய

செவ்விய புட்பகம் நிலத்தைச் சேர்தலும்

அவ் அவர்க்கு அணுகிய அமரர் நாடு உய்க்கும்

எவ்வம் இல் மானம் என்று இசைக்கல் ஆயதால்.

(317-3)
 
1264.

 நீடு வேல் ஏற்றவற்கு இளைய நின்மலன்

வாடிய மனத்தனாய் வசிட்டன் முன் வர,