| சூடிய கடி மலர் தூவி ஆர்த்தனன்; | |
ஏடு அவிழ் தாமரை இறைஞ்சி, எய்தினன். | (329-1) |
| | |
1265. | ஆயிடைக் குகனும் வந்து, ஆங்கு, ஆண்டவன் | |
| அடியில் வீழ, |
நாயகன் உவந்து புல்லி, 'நண்ணி, என் பின்பு வந்த |
தூயனே! கிளையினோடும் சுகம் இருந்தனையோ?' என்று, |
வாயிடை மொழிந்தான், - மற்றை மறைகளும் காணா |
அண்ணல். | (332-1) |
| | |
1266. | வேறு வேறு உள்ள சுற்றத்தவர்களும் வேந்தர் ஆதி | |
| கூறிய குழுவினோரும் குழுமி, அங்கு இராமன் பாதம், |
ஊறிய உவகை தூண்ட, தொழுதனர், உவந்த பின்பு |
தேறிய கமலக்கண்ணன் திரு நகர்க்கு எழுதலுற்றான். |
| (332-2) |
| | |
1267. | நம்பியும் பாதனோடு நந்தியம்பதியை நண்ணி, | |
| 'வெம்பிய எரியின் பாங்கர், விலக்குவென்' என்று |
விம்மும் |
கொம்பு இயல் மருங்குல் தெய்வக் கோசலை குளிர் |
பொன் பாதம் |
தம்பியரோடும் தாழ்ந்தான், தாமரைக் கண்ணீர் தாழ. |
| (332-3) |
| | |
1268. | மூன்று என நின்ற தன்மைக் குணங்களின் | |
| உயிர்கட்கு எல்லாம் |
சான்று என நின்ற மானச் சிறுவனைத் |
தலைப்பட்டாட்குத் |
தோன்றிய உவகைக்கு ஆங்கு ஓர் எல்லையும் |
சொல்லற்பாற்றோ? |
ஈன்ற போது ஒத்தது அன்றே, எதிர்ந்த போது ஒத்த |
தன்மை! | (332-4) |
| | |
1269. | இணை மலர்த் தாளின் வீழ்ந்த இலக்குவன் தன்னை | |
| ஏந்தி |
பணை முலைப் பாலும் கண்ணீர்த் தாரையும் பாய, |
நின்றாள்; |