| அடங்குமே, மற்று அப் பெரும் படை அரக்கர்தம் |
| யாக்கை, |
| அடங்கும் மாயவன் குறள் உருத் தன்மையின் |
| அல்லால்? |
|
அண்டத்தின் அகத்து வேலைகள் அடங்கும் - அண்டத்தின் எல்லைக்குள்ளே கடல்கள் அடங்கி நிற்கும்; அகல் மலையும் மன் உயிர் அனைத்தும் அடங்கும் - பெரியனவாய் விரிந்த மலைகளும் நிலைபேறுடைய எல்லா உயிர்களும் (அவ்வாறே) அண்டத்தின் எல்லையுள் அடங்கி நிற்கும்; அவ் வரைப்பின் அவை போல் - அந்த (அண்டத்து) எல்லையுள் அவை அடங்குதல் போல; அடங்கும் மாயவன் குறள் உருத் தன்மையின் அல்லால்- யாவும் அடங்குமாறு ஓங்கிய திருமாலின் வாமன உருவினுள் யாவும் அடங்கிவிடும் தன்மை கொண்டதுபோல் அல்லாமல்; அப்பெரும்படை அரக்கர் தம் யாக்கை அடங்குமே- அந்தப் பெரிய படை கொண்ட அரக்கர்களின் பேருருவம் அடங்கிவிடுமோ? (அடங்காது என்றபடி). |
(5) |
மூலபலப் படை வீரரின் தன்மை |
9304. | அறத்தைத் தின்று, அருங் கருணையைப் பருகி, வேறு |
| அமைந்த |
| மறத்தைப் பூண்டு, வெம் பாவத்தை மணம் புணர் |
| மணாளர் |
| நிறத்துக் கார் அன்ன நெஞ்சினர், நெருப்புக்கு |
| நெருப்பாய், |
| புறத்தும் பொங்கிய பங்கியர், காலனும் புகழ்வார்; |
|
அறத்தைத் தின்று - (அந்த மூலபலத்தைச் சேர்ந்த அரக்க வீரர்கள்) அறத்தையே உணவாகத் தின்று; அருங் கருணையைப் பருகி - (அந்த உணவுக்கு ஏற்ப) அரிய கருணையையே நீராகக் குடித்து; வேறு அமைந்த- (அறத்துக்கு) மாறாக அமைந்ததாகிய; மறத்தைப் பூண்டு - மறநெறியையே மேற்கொண்டு; வெம் பாவத்தை மணம் புணர் மணாளர்- கொடிய பாவத்தையே மணம் செய்து சேரும் மாப்பிள்ளைகளாய்; நிறத்துக் கார் அன்ன நெஞ்சினர்- நிறத்தினால் மேகத்தை ஒத்த கரிய நெஞ்சகத்தை உடையவர்களாய்; நெருப்புக்கு நெருப்பார் - சேர்ந்தவர்களை |