| பிணை எனத்தகைய நோக்கின் சீதையை, பேடை | |
| அன்னத் | |
| துணையினை, உலகில் கற்பின் பெருங் கதித் | |
| துறையை, கண்டாள். | (332-5) |
| | |
1270. | நான்முகன் தாதைதான் தன் மகன் என்று நல்கி, | |
| விம்மி | |
| பால் முலை சோர நின்ற பல் பெருந் தவத்தினாளை, | |
| கால்முதல் தொழுது, தங்கள் கட்டு இரும் பாவம் | |
| விட்டார் | |
| மான் முயல் உருவத்தோடும் தோன்றிய வானோர் | |
| எல்லாம். | (332-6) |
| | |
1271. | அவ் வயின் விமானம் தாவி, அந்தரத்து, அயோத்தி | |
| நோக்கி, | |
| செவ்வையின் படரல் உற்ற, செகதல மடந்தையோடும், | |
| இவ் உலகத்து உளோர்கள் இந்திரர் உலகு | |
| காண்பான், | |
| கவ்வையின் ஏகுகின்ற நீர்மையைக் கடுக்கும் அன்றே. | |
| | (332-7) |
| | |
1272. | வளம் கெழு கயிலை ஈசன், மலர் அயன், மறைகள் | |
| நான்கும், | |
| ஒழுங்கு உறும் அமரர் ஆதி உயிர்களும் உணர்தற்கு | |
| எட்டா | |
| விளங்கு தத்துவங்கள் மூன்றும் கடந்து உயர் வெளிப் | |
| பாழ் மேலாய், | |
| விளங்குறும் நேமிப் புத்தேள் மேவும் மா அயோத்தி | |
| கண்டார். | (332-8) |
| | |
1273. | விளங்கிய புட்பகம் நிலத்தின்மீது உற, | |
| தொழும் தகை அமரர்கள் துள்ளி ஆர்த்திட, | |
| களங்கனி அனைய அக் கண்ணன் மாதொடும் | |
| விளங்கினன் நகரிடை, விளைவு கூரவே. | (332-9) |