பக்கம் எண் :

 மிகைப் பாடல்கள்723

1283.

தேவர் கம்மியன்தான் செய்த செழு மணி மாட

கோடி

யாவரும் புகுந்து மொய்த்தார்; எழுந்த மங்கலத்தின்

ஓசை

நா வரும் பனுவல் வீணை நாரதன் முதலாய் உள்ள

மேவரு முனிவர் எல்லாம் விதிமுறை வேள்வி

கொண்டார்.

(29-1)
 
1284.

அந்தணர், வணிகர், வேளாண் மரபினோர், ஆலி

நாட்டுச்

சந்து அணி புயத்து வள்ளல் சடையனே அனைய

சான்றோர்

'உய்ந்தனம் அடியம்' என்னும் உவகையின் உவரி

நாண

வந்தனர், இராமன் கோயில் மங்கலத்து உரிமை

மாக்கள்.

(32-1)
 
1285.

'வான் உறு முகுர்த்தம் வந்தது' என்று மா மறைகள்

நான்கும்

தான் உருக் கொண்டு போற்ற, சலம் தவிர்ந்து

அமரர் ஏத்தி,

தேன் உறு மலர்கள் சிந்தி, திசைமுகம் பரவ, தெய்வ

வான் உறை மகளிர் ஆட, மா தவர் மகிழ்ந்து

வாழ்த்த.

(37-1)
 
1286.

இப்படித் தழுவி, மாதர் இருவரும், இரண்டு பாலும்,

செப்புறல் அரிய இன்பச் செல்வத்துள் செலுத்தும்

நாளில்,

கப்புடைச் சிரத்தோன் சென்னி கடிந்த வில் இராமன்

காதல்

வைப்புடை வளாகம்தன்னில், மன்னுயிர் வாழ்த்த,

வந்தான்.

(41-1)
 
1287.

மறையவர் வாழி! வேத மனுநெறி வாழி! நன்னூல்

முறை செயும் அரக்கர், திங்கள் மும் மழை, வாழி!

மெய்ம்மை