எரிக்கும் இயல்புடைய நெருப்புக்கு நெருப்புப் போன்ற சினமுடையவர்களாய்; புறத்தும் பொங்கிய பங்கியர் - (அகத்தில் உள்ள சின நெருப்புக்கு அடையாளமாய்) வெளியே விரிந்து தோன்றும் செம்முடியுடையவராய்; காலனும் புகழ்வார் - (கொல்லுதலில்) யமனாலும் புகழப்படுவோராய் விளங்கினர். |
அரக்கரை மணவாளப் பிள்ளைகளாகக் கூறியதற்கு ஒப்ப, 'மறத்தைப் பூண்டு' என்ற தொடருக்கு மறத்தையே அழகு செய்யும் அணிகளாகப் பூண்டு எனவும் பொருள் கொள்ளலாம். இப்பாடலில் வரும் வருணனை படிமக் (இமேஜரி) களஞ்சியமாக உள்ளது. |
(6) |
9305. | நீண்ட தாள்களால் வேலையைப் புறம் செல நீக்கி, |
| வேண்டும் மீனொடு மகரங்கள் வாயிட்டு விழுங்கி |
| தூண்டு வான் உரும் ஏற்றினைச் செவிதொறும் |
| தூக்கி, |
| மூண்ட வான் மழை உரித்து உடுத்து, உலாவரும் |
| மூர்க்கர்; |
|
நீண்ட தாள்களால் வேலையைப் புறம் செல நீக்கி- தங்கள் நீண்ட கால்களால் கடல் நீரை அப்பாற் செல்லும்படி போக்கி; வேண்டும் மீனொடு மகரங்கள் - வேண்டிய அளவு மீன்களோடு மகரப்பெரு மீன்களையும்; வாயிட்டு விழுங்கி - வாயில் போட்டு விழுங்கி; தூண்டுவான் உரும் ஏற்றினை - (மேகங்களால்) உண்டாக்கப்படுகின்ற பேரிடிகளை; செவிதொறும் தூக்கி - காதுகளிலெல்லாம் தொங்க விட்டுக்கொண்டு; மூண்டவான் மழை - திரண்டெழுந்து வருகின்ற பெரிய மேகங்களை; உரித்து உடுத்து - பிய்த்து ஆடையாக உடுத்துக்கொண்டு; உலா வரும் மூர்க்கர்- எங்கணும் உலவி வருவர் அந்த முருடர்கள். |
(7) |
9306. | மால் வரைக் குலம் பரல் என, மழைக் குலம் |
| சிலம்பா |
| கால் வரைப் பெரும் பாம்பு கொண்டு அசைத்த பைங் |
| கழலார்; |
| மேல் வரைப்பு அடர் கலுழன் வன் காற்று எனும் |
| விசையோர்; |
| நால் வரைக் கொணர்ந்து உடன் பிணித்தால் அன்ன |
| நடையார்; |