மால்வரைக் குலம் பரல் என- பெரிய மலைக் கூட்டங்களே உட்பரலாக அமைய; மழைக்குலம் சிலம்பா- மேகக் கூட்டங்களே காலில் அணியும் சிலம்புகளாக; கால் வரை- கால்களாகிய பெருமலைகளில்; பெரும்பாம்பு கொண்டு அசைத்த பைங்கழலார்- பெரிய பாம்பு கொண்டு கட்டிய பசும் பொன் கழல் அணிந்தவர்கள் (அவ் அரக்கர்கள்); மேல்வரைப் படர் கலுழன் - விண்ணக எல்லை வரை பறந்து செல்லும் கருடனால் எழுப்பப்படுகின்ற; வன் காற்று எனும் விசையோர் - வலிய காற்றுப் போன்ற வேகத்தை உடையவர்கள்;நால் வரைக் கொணர்ந்து - தொங்கி அசைகின்ற (துதிக்கை கொண்ட) மலையனைய யானைகளைக் கொண்டுவந்து; உடன் பிணித்தால் அன்ன நடையார் - ஒன்றாகக் கட்டியது போன்ற நடையை உடையவர்கள். |
நால்வரை கொணர்ந்து எனற்பாலது நால்வரைக் கொணர்ந்து என வந்தமை முந்தைய வரிகளில் அமைந்த ஓசையைப் பேணும் நயத்திற்காக. |
(8) |
9307. | உண்ணும் தன்மைய ஊன் முறை தப்பிடின், உடனே |
| மண்ணில் நின்ற மால் யானையை வாயிடும் பசியார்; |
| தண்ணின் நீர் முறை தப்பிடின், தடக் கையால் தடவி, |
| விண்ணின் மேகத்தை வாரி, வாய்ப் பிழிந்திடும் |
| விடாயர்; |
|
உண்ணும் தன்மைய ஊன் முறை தப்பிடின்- உண்ணுதற்கு உரிய தசைகள் உரிய நேரத்தில் கிடைக்காமல் போனால்; உடனே மண்ணில் நின்ற மால் யானையை வாயிடும் பசியார்- மண் மீது நிற்கின்ற பெரிய யானைகளை உடனே வாய்க்குள் போட்டுக் கொள்கின்ற பசியை உடையவர்கள் (அந்த அரக்கர்கள்); தண் இன் நீர் முறை தப்பிடின் - குளிர்ந்த இனிய நீர் குடிப்பதற்கு உரிய நேரத்தில் கிடைக்காமல் தடைப்பட்டால்; தடக் கையால் தடவி - பெரிய கைகளால் ஆகாயத்தைத் தடவி; விண்ணின் மேகத்தை வாரி - அவ் ஆகாயத்திலே படர்கின்ற மேகத் திரள்களை அள்ளி; வாய்ப் பிழிந்திடும் விடாயர் - தங்கள் வாயிலே பிழிந்திடுகின்ற நீர் வேட்கை உடையவர்கள் அவர்கள். |
(9) |
9308. | உறைந்த மந்தரம் முதலிய கிரிகளை உருவ |
| எறிந்து, வேல் நிலை காண்பவர், இந்துவால் யாக்கை |