| சொறிந்து, தீர்வு உறு தினவினர்; மலைகளைச் சுற்றி |
| அறைந்து, கற்ற மாத் தண்டினர்; அசனியின் |
| ஆர்ப்பர்; |
|
உறைந்த மந்தரம் முதலிய கிரிகளை - திண்ணெனச் செறிந்த மந்தரம் முதலிய மலைகளை; உருவ எறிந்து- ஊடுருவும்படியாக தங்கள் வேலால் தாக்கி; வேல் நிலை காண்பவர் - தாங்கள் ஏந்திய வேற்படையின் கூர்மையைப் பரிசோதித்து அறிபவர்கள் அந்த அரக்கர்கள்; இந்துவால் யாக்கை சொறிந்து- சந்திரனைப் பற்றி தங்கள் உடம்பைச் சொறிந்து; தீர்வு உறு தினவினர் - தங்கள் உடல் தினவைத் தீர்த்துக் கொள்பவர்கள்; மலைகளைச் சுற்றி அறைந்து - கையில் அகப்படும் மலைகளைச் சுழற்றி மோதி; கற்ற மாத் தண்டினர் - பயிற்சி செய்யும் கதாயுதங்களைப் பயன்படுத்தியவர்கள்; அசனியின் ஆர்ப்பர் - இடிபோல முழங்குவார்கள்; |
திருப்பாற்கடலைக் கடைவதற்குத் தேவர்கள் முதலியோர் பலரும் ஒன்றாகத் திரண்டு பற்றிப் பயன்படுத்திய மந்தரமலையையே தன் தோளுக்கு ஏற்ற கதாயுதம் என இரணியன் எடுத்தான். எடுத்தவன் 'இது நொய்ம்மையானது' எனக் கைவிட்டான். இக்கருத்தினை (கம்ப. 6199) கம்பர் பாடுவார். இச்செய்யுளோடு அதனை ஒப்பிட்டு நயம் உணர்க. |
(10) |
9309. | சூலம் வாங்கிடின், சுடர் மழு எறிந்திடின், சுடர் வாள் |
| கோல வெஞ் சிலை பிடித்திடின், கொற்ற வேல் |
| கொள்ளின் |
| சால வன் தண்டு தரித்திடின், சக்கரம் தாங்கின் |
| காலன், மால், சிவன், குமரன் என்று, இவரையும் |
| கடப்பார்; |
|
சூலம் வாங்கிடின்- சூலாயுதத்தைக் கையில் எடுத்தாலும்; சுடர் மழு எறிந்திடின்- ஒளி வீசும் மழுவாயுதம் கொண்டு தாக்கினாலும்; சுடர் வாள் கோல வெஞ்சிலை பிடித்திடின் - ஒளிர்கின்ற வாளினையும் அழகிய கொடிய வில்லையும் கையில் பிடித்தாலும்; கொற்றவேல் கொள்ளின்- வெற்றி வேலைக் கையிலே கொண்டாலும்; சால வன் தண்டு தரித்திடின் - மிக வலிய கதாயுதத்தைத் தாங்கினாலும்; சக்கரம் தாங்கின்- சக்கராயுதத்தைத் தாங்கினாலும்; காலன், மால், சிவன், குமரன் என்று இவரையும்- யமன், திருமால், சிவபிரான், முருகன் என்ற |