அண்மையில் நிகழ்வது ஒன்றும் அறியான். அப்படி வழிபட்டுக் கொண்டிருந்த ஒரு நாளில் அங்கு அகத்தியர் வர அவர் வந்தது அறியானாதலால் அவரை வரவேற்று உபசரிக்கவில்லை. அகத்தியர அரசன் செருக்குற்றனன் எனத் தவறாக நினைத்து அவனை யானையாகுக எனச் சபித்தனர். உருவால் மாறினன் ஆயினும் உணர்வால் திருமாலின் திருநாமமும் பக்தியுமே அவன் உளத்து நிறைந்து நின்றன. அதனால் யானையான பின்னரும் திருமாலின் பூசனை தொடர்ந்தது. ஒரு நாள் பூசனைக்கான பூப்பறிக்க குளம் ஒன்றில் இறங்க அக்குளத்தில் வாழ் முதலை யானையின் காலைக் கவ்விக் கொள்ள, தன்னை விடுவித்துக் கொள்ள இயலா யானை ''ஆதி மூலமே'' என்று அரற்ற, திருமால் கருடன் மேல் ஏறி வந்து தனது சக்கரப் படையால் முதலையைத் துணித்து யானையைக் காத்தனன்: மோட்சம் அளித்தனன் என்பது வரலாறு. |
6, அரன் மதி புனைந்த வரலாறு (303) |
தட்சப் பிரஜாபதி பெற்ற பெண்களாகிய அசுவினி முதலாய இருபத்தி ஏழு பெண்களையும் சந்திரன் மணந்தனன். இவ் இருபத்தி எழுவரும் இருபத்தி ஏழு நட்சத்திரங்கள். சந்திரன் உரோகிணி என்பாளிடம் காதல் மிகக் கொண்டு அவளுடனே எப்பொழுதும் கூடி வாழ்ந்தனன். துன்புற்ற, எஞ்சிய இருபத்தி அறுவரும் தந்தையாகிய தட்சனிடம் முறையிட, மகளிரின் துன்பம் பொறாத தக்கன் க்ஷயம் உற்றுத் தேய்க எனச் சபித்தனன். அச்சாபத்தால் நாள் ஒன்றாகக் கலைகள் குறைந்து வரக் கண்டு சந்திரன் எஞ்சிய பதினாறாவது கலையும் தேய்ந்து போதற்கு முன்பு சிவபிரானைச் சரண் அடைந்தனன். அவ்வொற்றைக் கலையைச் சிவனார் தம் தலையில் அணிந்து மீண்டும் கலைகள் வளரப் பணித்தனர் என்பது வரலாறு. |
7. புடை ஊற்றும் சடை முடிபெற்ற கதை (326) |
சிவபெருமான் சடையில் கங்கை என்பாள் எப்போதும் இருப்பவள். சூரிய வம்சத்துப் பிறந்த பகீரதன் என்ற சக்கரவர்த்தி, தன் பிதுர்க்கள் நற்கதி அடைய சிவபெருமானை நினைத்துப் பல காலம் தவம் செய்தனன். அத்தவத்திற்கு மகிழ்ந்து இரங்கிய ஈசன் தன் சடையில் கரந்துறையும் கங்கையில் ஏழு துளைகளைத் தரையில் செலுத்தினன். அவைகளே ஏழு புண்ணிய ஆறுகளாய்ப் |