பக்கம் எண் :

754யுத்த காண்டம் 

பாரதத்தில்   ஊற்றெடுத்து ஓடுகின்றன என்பதும் கதை. இவ்
ஏழு  ஆறுகளும்   மக்களின்   வளவாழ்வுக்கு  உறுதுணையாய்
இருப்பன என்பது கதை.
 

பகீரதன்   தன் பிதுர்க்கள்   நற்கதி அடைய சிவபெருமானை
வேண்டி   ஆகாய  கங்கையை   நிலவுலகுக்குக்  கொணர்ந்தான்.
ஆனால் அதன் வேகத்தைப் பூவுலகம் தாங்காது.  எனவே, அதன்
வேகத்தைத் தடுத்து ஆட்கொள மீண்டும் சிவனாரை வேண்டினான்.
சிவனார் தன் சடையில் அதன்   வேகம் தாங்கினார்.  அக்கங்கை
அன்றுமுதல்    சிவனார்தம்  சடையில்   கலந்து  உறைகின்றாள்;
சுரக்கின்றாள்  என்பதும் ஊற்றாய் வெளிப் போகின்றாள் என்பதும்
கதை.
 

8. உவரி நீர்க் கடல் தொட்ட கதை (6441, 1586, 3923)
 

நூறு   அசுவமேத  யாகங்களைச் செய்து  முடிப்பவன் இந்திரப்
பதவியை  எய்துவன். இதனால்  முன்பே  உள்ள இந்திரன்  இப்படி
யாகம்  செய்வார்க்கு  இடையூறு   செய்தல்  இயல்பு.   அவ்வாறு
அசுவமேத  யாகம்  செய்ய   முயன்றவர்களுள்  ஒருவன்  சகரன்
என்ற  மன்னன். இவன்  விட்ட அசுவத்தை  இந்திரன்  மாயையாற்
பிணித்து பாதாளத்தில் தவம் செய்யும் கபில   முனிவரின் பின்புறம்
உள்ள  மரத்தில்   கட்டி வைத்தனன். வேள்விக் குதிரை காணாமற்
போன   செய்தியை அறிந்த   சகரன்  தன் மக்கள் அறுபதினாயிர
வரையும்   அழைத்து  குதிரையை  மீட்டு வருமாறு ஏவினன். பூமி
முழுவதும் தேடியும்  குதிரையைக் காண இயலாத அவர்கள் பாதாள
உலகில்  தேடப்  பூமியைத்  தோண்டினர்.  அவ்வாறு   அவர்கள்
தோண்டிய குழியின் எல்லை  நூறு யோசனை அகலமும் ஆழமும்
கொண்டதாகும். அந்தக் குழியே நிலவுலகில்  கடலாய்  நிற்கின்றது.
ஆதலால் கடல் சாகரம் என்ற பெயர்க்கு உரியது ஆயிற்று.
 

9. அநந்தன் கீழுற நெளிந்த கதை.... (மி119) 

ஆமையின் முதுகில் மந்தரம் திரிந்த கதை.. (மி120)
 

சாவா,  மூவா, நோவா  வாழ்வளிக்கும் மாமருந்தாம் அமிழ்தம்
பெறவேண்டி  மந்தர மலையை  மத்தாக்கி வாசுகியை  நாணாக்கிப்
பாற்கடலைக் கடைந்தனர். தேவர்கள் வாற்புறமும்