பக்கம் எண் :

756யுத்த காண்டம் 

அழைக்கவில்லை யென்றாலும் தந்தையெனும் பாசத்தால் யாகம்
காணச்    சென்ற  போது அவளை    அவமதித்தான் செருக்குற்ற
தட்சனையும்    அவன்  செய்யும்   யாகத்தையும்   அழிப்பதற்கு 
வீரபத்திரனை அனுப்பி தலைவனாகிய   தன்னை மதியாமற் செய்த
யாகத்திற்குச்  சென்ற தேவர்கள் எல்லோரும் விரட்டப் பெற்றனர்.
பலரும் பல உறுப்புகளை இழந்தனர்.
 

12. அருந்ததி அனைய கற்பு என்ற கதை (1137, 6836)
 

இவர் கருத்தம முனிவரின் மகள். வசிட்டரின் மனைவி. மகா
பதிவிரதை. எனினும், தன் கணவரிடம் ஐயம் கொண்டாளாதலால்
கணவரின்   சாபத்தால்    கருமையும்,   செம்மையும்   கலந்த 
உருவத்தளாய்   யாவரும்  காண   நட்சத்திரமாய்த்   திகழ்ந்து
கொண்டுள்ளாள். துருவ மண்டலத்தின் அருகில் உள்ள சப்தரிஷி
மண்டலத்தின்  மத்தியில்  வசிட்டரும் அவர் அருகே அருந்ததி
மீனும்   இருப்பதனை   இன்றும்   காணலாம்.  சிவனார்   தம்
சோதனைகளையெலாம்   எளிதில்   வென்ற  மனத்திண்மையாம்
கற்பின்   வல்ல இவளிடம் வந்து   இவர்தம் கற்பைச் சோதிக்க
முயன்றபோது வெற்றி பெற்றவள்.
 

13. அகத்தியர் தமிழ் எனும் அளப்பரும் 

சலதி தந்த வரலாறு (2671, மி85)
 

ஒரு  காலத்தில்  இருடியர்  எல்லாரும் கூடி வடமொழியைச்
செம்மைப்படுத்த     வடபுலத்துக்      காசியில்    வடமொழிச்
சங்கமொன்றை நிறுவினர்.  அச்சங்கப்  புலவர்களுள் ஒருவராகிய
அகத்தியர்   என்பார்   அறிவிற்   சிறந்தவர்;   மற்றவர்களோடு
வாதிட்டுத் தம் கருத்தை நிலை நாட்ட வல்லவர். எனவே ஏனைய
எல்லாரும்  ஒன்றுபட்டு   இவரைத் தனித்துவிட்டு அவமதித்தனர்.
அவர்களோடு மாறுபாடு   கொண்ட அகத்தியர், சிவபெருமானிடம்
சென்று   குறையிரந்தனர்;  அவர்களின்   இறுமாப்பை   மாய்க்க
வழிகாட்ட வேண்டினர். அப்போது அவர்கள்   இருந்த அரங்கின்
முழுமையிலும் நறுமணம் நிறைந்த நிலையை அனுபவித்த அகத்தியர்
நறுமணத்திற்கான   காரணம் வினவ, பரம சிவனார் அவ்அரங்கின்
ஒரு   மூலைக்கு அழைத்துச்  சென்று குவிந்து கிடந்த ஏடுகளைக்
காட்டினார்.   அது   கண்ட அகத்தியர்,  இனிமை என்ற பொருள்
தரும்   'தமிழ்'   என்ற   சொல்லைப்   பன்முறை கூறினார். அம்
மொழிக்கான ஆதார விதிகளே இவ்