பக்கம் எண் :

 கதைக் குறிப்புகள்757

ஏடுகளில் உள்ளன; அவற்றைக் கொண்டு தென்திசை செல்க
எனப் பணித்தனர்  சிவனார்.  அவற்றோடு  தென்திசை  சென்று
பொதிய  மலையில்  இருந்து  தொல்காப்பியர் முதலான பன்னிரு
மாணவர்க்குச்   சொல்லிக்    கொடுத்து,   தமிழ்   மொழியைத்
தழைத்தோங்கச் செய்தனர் என்பது வரலாறு.
 

14. தையல் பாகன் என்பதன் வரலாறு (மி115)
 

பரமசிவனும்,  பார்வதி   தேவியும்   கைலையில்   ஒருங்கே
வீற்றிருந்த  ஒரு   நாள் பிருங்கி என்ற முனிவர் சிவனைக் காணச்
சென்றார். பிருங்கி சிவனைத் தவிர மறந்தும் புறந்தொழா இயல்பினர்.
எனவே இருவரும் நெருக்கமாக அமர்ந்திருந்த   நிலையில் சிவனை
மட்டும் வழிபடுவான் வேண்டி, வண்டு   வடிவெடுத்து இருவர்க்கும்
இடையே உள்ள   சிறிய இடை  வெளியில் புகுந்து சிவனை மட்டும்
வலம் வந்து  வணங்கினார். அது  கண்ட உமையம்மை  முனிவனை
வெகுளாது  காரணம் காணும்  ஆர்வத்தால்  அய்யனை   நோக்கி
''முனிவர்  தம் இச்செயலுக்கு என்ன காரணம்?'' என  வினவினள்.
இம்மை   மறுமை ஆகிய   இரண்டிலும  வேண்டிய  நலன்களைப்
பெறுவார். உம்மையும் இம்மை,  மறுமை ஆகிய  இரண்டும் கடந்த
செம்மை   நிலையாம்   வீடுபேறு  பெற   விழைவார் என்னையும்
வழிபடுவர். இதுவே  முனிவர்தம் செயலுக்குக்  காரணம்  என்றார்.
''இறைவன்  வடிவைப்  பிரிந்து  தனியே  நிற்றலினால்   அன்றோ
இந்த   நிலைமை'  என   எண்ணிய  அன்னை   பிரிவு அறியாப்
பெருநிலையைப்    பெறுவான்   வேண்டி  கேதாரம்  என்றதோர்
தலத்தமர்ந்து   அய்யனை   நினைத்து   அருந்தவம்   புரிந்தார்.
அகமகிழ்ந்த  அய்யன்  தன்  உடம்பில்  பாதியை  அன்னைக்கு
அளித்துத்   தன்னின்   வலப்பாகம்    ஆணாக    இடப்பாகம்
அன்னையாக   என்றும்  ஒன்றாய்  விளங்க  அருள்  பாலித்தார்.
இதுவே அர்த்தநாரீசன் (தையல்பாகன்) வரலாறு ஆகும்.
 

 15. திருமால் ஆகிய மோகினி மடந்தையால் அவுணர்,

தம் செய்கை மறந்ததும் அமரர்கள்
அமிழ்தம் துய்த்ததும் (மி121)
 

பாற்கடல்   கடைந்தபோது சமமாக   உழைத்த இரு சாராரும்
(தேவர்கள்,  அசுரர்கள்)   களைத்த   காலத்து   திருமாலே  இரு
வடிவெடுத்து  இரு  பக்கங்களிலும்  நின்று  உதவி   கடைதலைச்
செய்தார் என்பதும், அமிழ்தத்தைத் தேவர்களே பெற வேண்டும்