பக்கம் எண் :

758யுத்த காண்டம் 

அசுரர் பெறல் ஆகாது என்று எண்ணிய திருமால் அழகிய மோகினி
நங்கையாய் அவர்கள் முன்பு தோன்றி அசுரர்களிடையே உணர்ச்சியைத
தூண்டி உழைப்பால் பெற்ற ஊதியம் மறந்து மோகினியின் காரணமாகத்
தம்முள்   பகைத்து   சண்டையிட்டுக்   கொண்ட காலத்து, தேவர்கள
அமிழ்தை உண்டு களித்தனர் என்பதும் வரலாறு.
 

16. சிவன் ஆலம் உண்ட கதை (மி122)
 

சீதர மூர்த்தி திருவும் ஆரமும் அணிந்த கதை
 

வாசுகி   என்னும் பாம்பின்   வாய்ப்புறமாக அசுரர்களும், அதன்
வால்புறமாக தேவர்களும் நின்று அதனைக் கயிறாகக் கொண்டு மந்தர
மலையை   மத்தாக்கி   பாற்கடலைக்   கடைந்த   காலத்து,  அதில்
எத்தனையோ மங்கலப் பொருள்கள் தோன்றின. அவை அனைத்தையும்
தேவர்களே    எடுத்துக்   கொண்டனர். அதில்   தோன்றிய  துளசி
மணிமாலையையும்   இலக்குமியையும்  திருமால் எடுத்துக் கொண்டார்
என்பது   கதை.  மங்கலப் பொருள்களையெலாம் தேவர்கள் எடுத்துக்
கொண்ட   பின்னர்   அமிழ்தம்   தோன்றுதற்கு   முன்னர் தேய்ந்த
பிறைச்சந்திரன்   தோன்றினான்.   அதனைச் சிவனார்க்கு அளித்தனர்.
பின்னர்   நஞ்சு தோன்றியது.   அதனைக் கண்டு அஞ்சி ஓடிய இரு
சாரார்க்கும் அச்சம் அகற்றித் தானே நஞ்சினை எடுத்துக் கொண்டான்.
எல்லாவற்றிற்கும்   தலைவனாம் சிவபெருமான் என்பது வரலாறு. இது
பல்வேறு வகையில் வழங்கும்.
 

17. திதி அவள் வயிற்றுறு மகவு மருத்து எனும் நாமம் 

பெற்ற கதை (மி125)
 

அமிழ்தத்தைப்   பெறாது தடுக்க   வந்த மோகினியால் தம்முள்
மாறுபட்டுச்   சண்டையிட்டு அனைத்து    அசுரர்களும் அழிந்தனர்.
இவர்களின்   தாயான திதி   என்பாள்   இவ்வளவுக்கும்   காரணம்
தேவர் தலைவனாம் இந்திரன் தானே அவனைக் கொல்லும் ஆற்றல்
பெற்ற மகன் ஒருவனைப்  பெற நினைத்துத் தன் கணவனான காசிப
முனிவரை   வணங்கி வேண்டினாள். அவரால் கருவுற்றாள். முனிவர்
இக்கரு ஆயிரம் ஆண்டுகள் உன்  வயிற்றில் வளரும். அக்காலத்து
நீ   அறநெறிகளின்படி   வாழ்தல்   வேண்டும் இல்லையேல் கருச்
சிதைவுறும் எனக் கூறிப் போந்தனன். இதனை