அறிந்த இந்திரன், திதி என்பாளிடம் ஒரு பணியாளனாக வந்து சேர்ந்து இவள் எப்போது முறைமை தவிர்வாள் அச்சமயத்தில் அவள் வயிற்றுக் கருவைக் குலைக்கலாம் எனக் காலம் பார்த்து இருந்தான். ஆயிரம் முடிய இன்னும் பத்து ஆண்டுகளே இருக்கும் போது தெற்குப் புறம் தலை வைத்துப் படுத்தல் வேண்டும் என்ற முறைமைக்கு மாறாக ஒரு நாள் நடுப் பகலில் வடபால் தலை வைத்துப் படுத்து உறங்கினாள். இதுவே சமயம் என்று இந்திரன் அவள் வயிற்றுள் புகுந்து வளரும் கருவை ஏழு துண்டங்களாக்கினான். வயிற்றுக் கரு அழ, திதி கண் விழித்து நிகழ்ந்தது உணர்ந்து கருவைக் கொல்ல வேண்டாவென வேண்டினாள், இந்திரன் அவள் முன் தோன்றி தன் பிழையைப் பொறுக்க வேண்டுமென வேண்டினான். திதியும் தன் தவறு உணர்ந்து தன்னால் கரு துண்டு பட்டது தெளிந்து, ''என் மக்களான இவ் எழுவரும் எங்கும் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் மாருதர்கள் என்று பேர் பெற்று வாழவேண்டும்'' என இந்திரனை வேண்டினாள். அவனும் அவ்ஏழு துண்டங்களுக்கும் ஆவகம், பிரவகம், சம்வகம், உத்வகம், விவகம், பரிவகம், பராவகம் எனப் பெயர் இட்டனன். அவர்கள் ஒவ்வொரு விண்மீன் மண்டலத்தில் இடம்பெற்றனர். |