பக்கம் எண் :

76யுத்த காண்டம் 

இவர்களையும்; கடப்பார்- போரில் வென்று மேம்படுவர் அவ்
அரக்கர்கள்.
 

இவரையும் என்பதில் உம்மை, உயர்வு சிறப்பு. 
 

(11)
 

9310.

ஒருவரே வல்லர், ஓர் உலகத்தினை வெல்ல; 

இருவர் வேண்டுவர், ஏழ் உலகத்தையும் இறுக்க; 

திரிவரேல், உடன் திரிதரும், நெடு நிலம்; செவ்வே 

வருவரேல் உடன் கடல்களும் தொடர்ந்து, பின் 

வருமால்.

 

ஓர் உலகத்தினை வெல்ல ஒருவரே வல்லர்- ஓர் உலகத்தை
வெல்ல   வேண்டுமாயின்   அவ்   அரக்கர்களில்  ஒருவரே அதற்கு
வேண்டிய வல்லமை உடையவர்; ஏழ் உலகத்தையும் இறுக்க இருவர்
வேண்டுவர்
- ஏழு உலகங்களையும் அழிப்பதற்கு அவர்களில் இருவர்
தேவைப்படுவார்கள்;   திரிவரேல்  நெடுநிலம்  உடன் திரிதரும்
அவர்கள் ஓர் இடத்தில் நில்லாமல் திரிந்து கொண்டிருப்பாராயின் பெரிய 
நிலவுலகம் அவர்களுடனே சேர்ந்து திரியும்; செவ்வே வருவரேல்
நேராக அவர்கள் வந்தால்; கடல்களும் உடன் தொடர்ந்து பின்வரும் 
- கடல்களெல்லாம் ஒன்றாகத் தொடர்ந்து அவர்கள் பின்னே வரும்.
 

ஆல் - அசை. 
 

(12)
 

நால்வகைப் படைகள்
 

9311.

மேகம் எத்தனை, அத்தனை மால் கரி, விரிந்த 

நாகம் எத்தனை, அத்தனை தேர்; நனி நாளாப் 

போகம் எத்தனை, அத்தனை புரவியின் ஈட்டம்; 

ஆகம் உற்றன எத்தனை, அத்தனை அனிகம். 

 

மேகம் எத்தனை அத்தனை மால் கரி- மேகங்கள் எத்தனை
உண்டோ அத்தனை பெரிய யானைகள்; விரிந்த நாகம் எத்தனை
அத்தனை தேர்
- எங்கணும் பரவியுள்ள யானைகள் எத்தனையோ
அத்தனைக்கு ஈடான தேர்கள்; நனி நாளாப் போகம் எத்தனை
அத்தனை   புரவியின்   ஈட்டம்
-  நெடுநாளாகி   விளைந்த
(நெல்மணிகள்) விளைச்சலில் எத்தனையோ அத்தனை குதிரைகளின் 
கூட்டம்; ஆகம் உற்றன எத்தனை அத்தனை அனிகம் - உடல்