பக்கம் எண் :

762யுத்த காண்டம் 

பிறப்பித்தான். தன் தந்தையைக் கொன்ற திருமாலின் மீது
பழிவாங்குவது தக்கதென்ற தேவர்களின் அறிவுரைக்குச் செவி
சாய்த்துத்   திருமால்மீது போர்   தொடுத்தான்.   திருமாலோ
தன்   சக்கரப்படையை ஏவி  அவன் நூறு சிரங்களையும் நூறு
கால்களையும் அறுத்துத் தள்ளினார் என்பது வரலாறு.
 

24. அகத்தியர் கடல் குடித்த வரலாறு (2287)
 

இந்திராதி தேவர்களின் பகைவர்களாகிய விருத்திரா சூரனும்
அவனைச் சேர்ந்தவர்களும் தேவர்களுக்குத் தோற்றுக் கடலில்
ஒளிந்து கொண்டனர். அவர்களைத்   தேடிக் கொண்டு வெற்றி
பெற   இயலாத தேவர்கள்   அகத்திய மாமுனிவரை வேண்ட,
அகத்தியர்  அப்பெருங்கடல் நீர்  அனைத்தையும் தனது ஒரு
கையால்   உழுந்தளவாக்கி   முகந்து   பருகி கடலை வற்றச்
செய்தார். வெளிப்பட்ட  விருத்திராசூரனை இந்திரன் கொன்றான்.
தேவர்கள் மீண்டும் வேண்டிக் கொண்டபோது அகத்தியர் தான்
உண்ட நீரை உமிழ்ந்து கடலைத் தந்தார் என்பது வரலாறு.
 

25. உலகம் நிலைபெற நிறுத்திய வரலாறு (2287)
 

சிவனார்க்கும்   பார்வதிக்கும் திருமணம்   நடந்த ஞான்று
எல்லாத்   தேவர்களும் மேருமலையில்   திரண்ட காரணத்தால்
வடதிசை தாழ்ந்தது.   தென்திசை   உயர்ந்தது. அதனைச் சமம்
செய்யத்   தக்கார்  அகத்தியரே என   அறிந்த   ஆண்டவன்
அகத்தியரைத்   தென்திசை   வருமாறு பணித்தார். ஆண்டவன்
சொற்படி   தென்திசைக்கு வந்து பொதிகை மலைமேல் நின்றார்.
நிலம் சமம் ஆயிற்று என்பது வரலாறு.
 

26. எழுவர் என நின்ற தொல்லை முதல் ''முனிவர்'' 

ஐயம் துடைத்திலையோ (2617)
 

ஒரு காலத்தில் தேவர்கள்   முனிவர்கள்  எல்லாரும் மேரு
மலையில்   ஒன்று கூடி மும்மூர்த்திகளில் பரத்துவ நிலையுற்றார்
யார் என அறிய   வேண்டும் என முடிவு   செய்தனர். புராணச்
செய்திகள்   அவர்களை மேலும் மயங்கச் செய்தனவே அன்றித்
தெளிவை உருவாக்கவில்லை.   எனவே சப்தரிஷிகள் எனப்படும்
ஏழு முனிவர்களை நாடித் தங்கள் விருப்பை வெளியிட்டனர்.